Breaking

Friday, May 01, 2020

தகுதியுள்ள பெற்றோரிடம் கல்வி கட்டணம் வசூலிக்க கோரிக்கை.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு உதவியாக, கல்விக் கட்டணம் செலுத்த முன்வரும், தகுதியுள்ள பெற்றோரிடம் இருந்து, கட்டணம் பெற அனுமதி வழங்குமாறு, தனியார் பள்ளிகள் கோரியுள்ளன. தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சங்க, பொதுச் செயலர் நந்தகுமார், முதல்வருக்கு அனுப்பிய மனு:கொரோனா வைரஸ் பாதிப்பால், மார்ச், 24 முதல் தனியார் பள்ளிகள் இயங்கவில்லை. இதனால், நிர்வாக ரீதியாகவும், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதிலும், பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறோம்.
தனியார் கல்வி நிறுவனங்கள் செலுத்த வேண்டிய மின் கட்டணங்களை, மின்சார வாரியம், முந்தைய கணக்கீட்டின் படி செலுத்த அறிவுறுத்திஉள்ளது. பள்ளி இயங்காத காரணத்தால், குறைந்த அளவே மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பயன்படுத்திய அளவுக்கு மட்டுமே மின் கட்டணம் வசூலிக்க வேண்டும். கடந்த கல்வியாண்டில், பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு செலுத்த வேண்டிய கல்விக் கட்டணம், 25 சதவீதம் நிலுவையில் உள்ளது. இந்த கட்டணத்தை, நடப்பு கல்வியாண்டில் வசூலிக்கக் கூடாது என, தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.இதனால், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு ஏப்., மாத ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுஉள்ளது. தகுதியுள்ள பெற்றோரிடம் இருந்து கல்வி கட்டணத்தை பெற, அரசு அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog