👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தினமலர்' மற்றும் 'அமிர்தா விஸ்வ வித்யாபீடம்' வழங்கும், 'ஆன்லைன் வழிகாட்டி' நிகழ்ச்சியில், 'நீட் மற்றும் ஜே.இ.இ.,' தேர்வுகளில், அதிக மதிப்பெண் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து, இன்று விளக்கம் அளிக்கப்படுகிறது.
நேற்று நடந்த நேரலை நிகழ்ச்சியில், வேளாண் துறை சார்ந்த படிப்புகள், தகுதிகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர், குமார் ஆலோசனை வழங்கினார். இன்ஜினியரிங் படிக்க விரும்பும் மாணவர்கள் வளர்த்து கொள்ள வேண்டிய திறன்கள் குறித்து, ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லுாரி முதல்வர், அலமேலு மற்றும் கல்லுாரியை தேர்வு செய்யும் போது கவனிக்க வேண்டிய பிரதான அம்சங்கள் குறித்து கல்வி ஆலோசகர், அஸ்வின் ஆகியோர் விரிவாக விளக்கினர்.
ஆலோசனை : மருத்துவ படிப்புகளில் சேர்க்கை பெற, அவசியம் எழுத வேண்டிய நுழைவு தேர்வான, 'நீட்' குறித்தும், ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற எழுத வேண்டிய, ஜே.இ.இ.,, தேர்வு குறித்தும், கே.கே.ஆனந்த் நேரலையில், இன்று ஆலோசனை வழங்குகிறார். மேலும், எதிர்கால வேலை வாய்ப்புகள், வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள் குறித்து, புனிதா மற்றும் வணிகவியல் வாய்ப்புகள் குறித்து ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி முதல்வர், கருணாகரன் ஆகியோர் பேசுகின்றனர்.
வரும், 17ம் தேதி வரை தினமும் காலை, 10:௦௦ முதல், 12:௦௦ மணி வரை நடைபெறும்.இந்த நேரலை நிகழ்ச்சியில் பங்குபெற மற்றும் கல்வியாளர்களிடம் உங்களது சந்தேகங்களுக்கு விளக்கம் பெற,
www.kalvimalar.com என்ற இணையதளத்தில், பெயர், மொபைல் எண், இ- - மெயில் முகவரி போன்ற தகவல்களை உடனே பதிவு செய்யலாம்.இந்நிகழ்ச்சியில், எச்.சி.எல்., டெக்னாலஜிஸ் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், 'பவர்டு பை ஸ்பான்சர்'களாக பங்கேற்கின்றன. வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், டெக்னாலஜி அண்டு அட்வான்ஸ்டு ஸ்டடீஸ், ஸ்ரீ சாய்ராம் கல்வி நிறுவனங்கள், இ-பாக்ஸ் காலேஜ் மற்றும் ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் ஆகிய நிறுவனங்கள் உடன் வழங்குகின்றன.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.