அண்ணா பல்கலை - 69% இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்தா? மே இறுதிக்குள் முடிவெடுக்க மத்திய அரசு நெருக்கடி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 07, 2020

Comments:0

அண்ணா பல்கலை - 69% இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்தா? மே இறுதிக்குள் முடிவெடுக்க மத்திய அரசு நெருக்கடி!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அண்ணா பல்கலை . க்கு மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து தராவிட்டாலும் , தேவை யான அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து கொடுக்கும் என்று அமைச்சர் கே . பி . அன்பழகன் தெரிவித்தார் . உயர்கல்வி நிறுவனங்களை மேம்படுத்த ' உயர் சிறப்பு கல்வி நிறு வனம் ' ( இன்ஸ்டிடியூசன்ஸ் ஆப் எ மினென்ஸ் ) திட்டத்தை மத்திய அரசு 2017 - ல் கொண்டு வந்தது . இத்திட்டத்தின்கீழ் தேர்வாகும் கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டுக்கு ரூ . 1 , 000 கோடி நிதியுதவி மற்றும் பல்வேறு சலுகைகள் தரப்படும் . அதன்படி தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு அந்தஸ்து பெற தேர்வானது .
இதுகுறித்து ஆராய்ந்து முடிவெடுக்க உயர்கல்வி உட்பட 5 துறை அமைச்சர் கள்மற்றும் 3 செயலர்கள் கொண்ட குழுவை உயர்கல்வித்துறை அமைத்தது. அந்தஸ்து பெறுவதற்கான ஒப்புதலை மே 31 - ம் தேதிக்குள் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று மத்திய அரசு காலக்கெடு விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின . இதுகுறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே . பி . அன்பழகன் கூறியதாவது : அண்ணா பல்கலைக் கழக சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் மத்திய அரசு காலக்கெடு எதுவும் விதிக்க இயலாது . இதுதொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட குழு2 முறை தான் கூடியுள்ளது . அதன்பின் ஊரடங்கு காரணமாக ஆலோசனை நடத்தவில்லை . இந்த குழு பரிந்துரையின் அடிப்படையில்தான் இறுதி முடிவெடுக்க முடியும் . எனினும் , இந்த அந்தஸ்தை வேறு யாருக்காவது மத்திய அரசு தந்துவிட்டாலும் , அண்ணா பல்கலை . க்கு தேவையான அனைத்து வசதிகளையும் தமிழக அரசே மேற்கொள்ளும் . இவ்வாறு அவர் கூறினார் .
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews