மத்திய அரசின் ‘உமங்’ செயலியில் பணியாளர் தேர்வாணைய விபரம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 04, 2020

Comments:0

மத்திய அரசின் ‘உமங்’ செயலியில் பணியாளர் தேர்வாணைய விபரம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையும், தேசிய மின்ஆளுமை நிறுவனமும் இணைந்து ‘உமங்’ (umang) என்ற செல்போன் செயலியை கடந்த 2017-ம் ஆண்டு அறிமுகப்படுத்தின. மத்திய, மாநில அரசுகளின் மின்னணு சேவைகள், ஆதார், டிஜி லாக்கர், தொழிலாளர் வருங் கால வைப்புநிதி (இபிஎப்), சமையல் காஸ் சிலிண்டர் பதிவு உட்பட 200 விதமான சேவைகளை இந்த செயலியில் பெறலாம்.
இந்நிலையில், தற்போது ‘உமங்’ செயலியில் பணியாளர் தேர்வாணைய (ஸ்டாஃப் செலக் ஷன் கமிஷன்) சேவைகளும் இணைக்கப்பட்டுள்ளன. அந்த தேர்வாணையம் நடத்தும் போட் டித் தேர்வுகளுக்கான அறிவிப்பு கள், தேர்வு முடிவுகள், வருடாந் திர தேர்வுக்கால அட்டவணை, காலி பணியிடங்கள் போன்ற விவரங்களை இதில் தெரிந்து கொள்ளலாம் என பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள் ளது. கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் ‘உமங்’ செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews