கடலூரில் ஒரே நாளில் 107 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.புதிதாக 107 பேருக்கு கொரோனா ஏற்பட்டதை அடுத்து தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதித்த 160 பேரில் 131 பேர் சென்னை கோயம்பேட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்கள் ஆவர். இதனிடையே கோயம்பேட்டில் இருந்து திரும்பிய மேலும் 435 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விழுப்புரத்தில் இன்று மேலும் 20 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.இவர்கள் அனைவரும் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வியாபாரம் செய்வதற்கும், வேலை செய்வதற்கும் சென்று வந்தவர்கள் என்று கண்டறிப்பட்டுள்ளது.விழுப்புரத்தில் மட்டும் கோயம்பேடு மார்க்கெட் தொடர்புடைய 76 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரியலூரில் மேலும் 24 பேருக்கு கொரோனா
கோயம்பேடு சந்தையில் இருந்து வந்த கூலித் தொழிலாளர்கள் 20 பேர் மற்றும் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் 4 பேர் என புதிதாக 24 பேருக்கு அரியலூரில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் அரியலூர் மாவட்டத்தில் கோயம்பேடு சந்தையில் இருந்து வந்தவர்களின் தொற்று எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. இது மட்டுல்லாமல் காவலர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அரியலூர் மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 53 ஆக அதிகரித்துள்ளது. இதில் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடலூர் - 131
சென்னை 63
விழுப்புரம் 76
அரியலூர் 42
காஞ்சிபுரம் 7
பெரம்பலூர், திருவாரூர், தஞ்சாவூர் தலா 1
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.