Search This Blog
Monday, May 04, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
Zoom இல்லையென்றால், அதற்கான மாற்று என யோசித்துக் கொண்டிருந்த வேலையில், ஏற்கெனவே தான் வழங்கிவந்த 'ஹேங்அவுட்ஸ் மீட்' (Hangouts Meet) செயலியை மெருகேற்றி, அதைப் பயனர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வேலையில் இறங்கியிருக்கிறது கூகுள்.
'வொர்க் ஃப்ரம் ஹோம்' என்பது ஐ.டி, துறை மட்டுமல்லாது, பலருக்கும் புதிய வேலை கலாசாரமாக மாறிவிட்டது. கணினி மூலம் வேலை செய்ய முடிந்த பலரும் தற்போது 'வொர்க் ஃப்ரம் ஹோம்' முறையில்தான் பணிசெய்துவருகிறார்கள். இதில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் அடக்கம். வீட்டிலிருந்தபடியே வேலைபார்க்கும் அநேகர், வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் இணைந்திருக்க, Zoom செயலியைத்தான் பரவலாகப் பயன்படுத்தி வந்தனர். மற்ற வீடியோ காலிங் செயலிகள் தனிப்பட்ட முறையில் பயன்படுத்த சிறப்பாக இருந்தாலும், தொழில்ரீதியில் குழுவாக இயங்க Zoom செயலி சிறப்பான வசதிகளை வழங்கியதால், பலரும் அதைப் பயன்படுத்தத் தொடங்கினர். அதைப் பயன்படுத்தப் பயன்படுத்த, அதில் உள்ள குறைகள் வெளிவரத் தொடங்கின. அதில், சமீபத்தில் மிகப் பெரிய குற்றச்சாட்டாக முன் வைக்கப்பட்டது, Zoom-ஐ எளிதாக ஹேக் செய்யலாம் என்பது.
கூகுள் மீட்
இந்திய அரசும் Zoom செயலி ஆபத்தானது, அதைப் பயன்படுத்த வேண்டாம் என அதிகாரபூர்வமாகவே அறிவித்துள்ளது. Zoom இல்லையென்றால், அதற்கான மாற்று என யோசித்துக் கொண்டிருந்த வேலையில், ஏற்கெனவே தான் வழங்கிவந்த 'ஹேங்அவுட்ஸ் மீட்' (Hangouts Meet) செயலியை மெருகேற்றி, அதைப் பயனர்கள் மத்தியில் கொண்டுசேர்க்கும் வேலையில் இறங்கியிருக்கிறது, கூகுள். ஹேங்அவுட்ஸ் என்ற பெயரை மாற்றி, கூகுள் மீட் என்று பயனர்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் வசதிகளையும் மாற்றிவருகிறது கூகுள்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
App's
CONFERENCE
VIDEOS
புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும் Google Meet! -'Zoom'-ஐ விட்டு விலகும் பயனர்கள்!
புதிய வசதிகளை அறிமுகப்படுத்தும் Google Meet! -'Zoom'-ஐ விட்டு விலகும் பயனர்கள்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.