மும்முனை தாக்குதலில் ஆசிரியர், அரசு ஊழியர்கள் நெருக்கடியை கைவிட வலியுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 01, 2020

2 Comments

மும்முனை தாக்குதலில் ஆசிரியர், அரசு ஊழியர்கள் நெருக்கடியை கைவிட வலியுறுத்தல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா தொற்று சூழ்நிலையில் ஆசிரியர், அரசு ஊழியர்கள் மீது மாநில அரசு மும்முனை தாக்குதலை தொடுத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொரோனாவை விரட்ட மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் அரசு ஊழியர், ஆசிரியர்கள் தன்னார்வலர்களாக பணிபுரிகின்றனர். ஒருநாள் சம்பளத்தை நிவாரணமாக வழங்கினர். ஒரே நேரத்தில் அகவிலைப்படி நிறுத்தம், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ரத்து, வருங்கால வைப்பு நிதி வட்டி குறைப்பு ஆகிய நடவடிக்கைகளால் மனரீதியான பாதிப்பை அரசு ஏற்படுத்தியுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்க மாநில பொருளாளர் இளங்கோ கூறியதாவது: அகவிலைப்படி என்பது மத்திய, மாநில அரசுகளின் விலை உயர்வு குறியீடுகள் அடிப்படையில் வழங்கும் நிவாரணம் ஆகும். அதை நிறுத்துவது பொருளதார பாதிப்பு ஏற்படுத்தும். மத்திய அரசே அறிவிக்காத போது ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பினையும் தடை செய்ததுஅரசின் வெறுப்பை காட்டுகிறது. வருங்கால வைப்பு நிதி வட்டி சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதன் மூலம் மும்முனை தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும், என்றார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

2 comments:

  1. கற்றலில் இனிமை சேர்த்து கற்பித்தலில் புதுமை கோர்த்து தன்னையே தாரை வார்த்து நன்னம்பிக்கை முறையாக என்றைக்கும் செயலாற்றும் திறந்த மனங்கொண்ட தெய்வங்கள் ஆசிரியர்கள்..போற்றுவாரின் போன்றலையும் புழுதிவாரி தூற்றுவோரின் தூற்றலையும் இன்முகத்தோடு ஏற்கும் பன்முக ஆற்றலாளர்கள் ஆசிரியர்கள்..எத்தனையோ இழப்புகளை சந்தித்தவர்கள்.எதையும் தாங்கள் இதயக் கொண்ட ஏந்தல்கள்..
    பொறுமை காப்போம்..நமது அரசாங்கம் நமக்கானது..என்றெண்ணுவோம்..ஊ

    ReplyDelete
  2. தொடர்ச்சி...... ஊக்கமது கைவிடேல்
    என்று உலகினுக்குக் கற்பிக்கும் நமது சமூகம் ஊக்கமதை விடலாமா? பொறுத்தார் பூமியாள்வாரென்ற பொன்மொழியை நம் மொழியாக்கி நம்பிக்கையுடன் இருப்போம்.. கடமையாற்றும் கண்ணியங்காக்கும் வீரர்களாக களப்பணியாற்றுவோம்.. மக்களுக்காற்றும் சேவை. மகேசனுக்காற்றும் சேவை..

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews