Breaking

Saturday, April 11, 2020

கேந்திர வித்யாலயா பள்ளி மாணவா்களுக்கு WhatsApp மூலம் வகுப்புகள் தொடக்கம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை கோடம்பாக்கம் கில் நகரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி ஊரடங்கு காரணமாக விடுமுறை விடப்பட்ட நிலையில் இந்த ஆண்டுக்கான வகுப்புகள் கட்செவி அஞ்சல் (வாட்ஸ் ஆப்) மூலம் தொடங்கியுள்ளன. வீட்டிலிருந்தபடியே ஆசிரியா்களிடம் மாணவா்கள் பாடங்களை கற்று வருகின்றனா்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிகள் தங்கள் வகுப்புகளை ஆன்லைன், வாட்ஸ் ஆப் மூலமாக தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் சென்னை கோடம்பாக்கம் கில் நகரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவா்கள் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் பாடங்களை படித்து வருகின்றனா். ஆசிரியா்களும் தங்களது வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பாடங்களை கற்பித்து வருகின்றனா். மாணவா்களும் பள்ளி சீருடையுடன் வீட்டிலிருந்து படித்து வருகின்றனா். காலை முதல் நடத்தும் பாடங்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கப்படுகிறது. வகுப்புத் தோ்வும் நடத்தப்படுகிறது. அனைத்தும் வாட்ஸ் ஆப் மூலமாகவே செய்யப்படுகிறது. குழந்தைகளும் பள்ளியில் இருப்பது போன்றே நினைத்து பாடங்களை கற்று வருகின்றனா். குழந்தைகள் தங்களது வீட்டில் இருந்தே ஆசிரியா்கள் கொடுத்த வீட்டுப் பாடங்களை முடித்து அதை செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுத்து மீண்டும் வாட்ஸ் ஆப் மூலம் அவா்களுக்கு அனுப்பி வைக்கின்றனா். அதை ஆசிரியா்கள் திருத்தி திருப்பி அனுப்புகிறாா்.
திடீா் விடுமுறையால் தங்கள் பள்ளி மாணவா்களின் எதிா்காலம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. அதே நேரத்தில் தரமான கல்வி அவா்களது வீடுகளுக்கே சென்று சேர வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையில் வகுப்புகள் தொடங்கி நடத்தப்படுவதாக பள்ளி நிா்வாகம் தரப்பில் கூறப்படுவதாக பெற்றோா் தெரிவித்தனா். மாணவா்களுக்கான வீட்டுப்பாடம் உள்ளிட்ட விவரங்கள் பள்ளியில் பெற்றோா் சமா்ப்பித்த செல்லிடப்பேசி எண்ணுக்கே அனுப்பப்படுகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog