Search This Blog
Monday, April 27, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, பொதுப்பிரிவு கவுன்சிலிங், இந்த வார இறுதியில் துவங்குகிறது.
தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.டி., - எம்.எஸ்., பட்ட மேற்படிப்புகளுக்கு, 1,900 இடங்கள் உள்ளன. இதில், 50 சதவீதம், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு தரப்படுகிறது. மீதமுள்ள, 950 இடங்களும், தனியார் மருத்துவ கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டுக்கான, 250 இடங்களும், மாநில அரசுக்கு உள்ளன. சென்னையில் உள்ள, அரசு பல் மருத்துவ கல்லுாரி, ராஜா முத்தையா பல் மருத்துவ கல்லுாரி மற்றும் தனியார் பல் மருத்துவ கல்லுாரிகளில், மாநில அரசுக்கு, எம்.டி.எஸ்., பட்டமேற்படிப்பு இடங்கள் உள்ளன.அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான இடங்களை, 'நீட்' நுழைவு தேர்வு அடிப்படையில் நிரப்ப, மருத்துவ கல்வி இயக்குனரகம், கவுன்சிலிங் நடத்த உள்ளது.
அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், 2020 - 21ம் கல்வியாண்டுக்கான முதுநிலை படிப்புகளுக்கு, நீட் தேர்வில் தகுதி பெற்றவர்கள், 'ஆன்லைனில்' விண்ணப்பித்து உள்ளனர். இதில், அரசு டாக்டர்களுக்கு சலுகை மதிப்பெண் உண்டு. பரிசீலனைக்கு பின், தர வரிசை பட்டியல், www.tnhealth.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுஉள்ளது. இதில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 6,455 பேர் தகுதிபெற்றுள்ளனர்.தரவரிசை பட்டியலில், முதல் மூன்று இடங்களை, அரசு டாக்டர்கள் பிடித்தனர். அரசு ஒதுக்கீட்டுக்கான, எம்.டி.எஸ்., பல் மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில், 744 பேர் இடம்பெற்றுள்ளனர்.
அதேபோல், தனியார் மருத்துவக் கல்லுாரிகளின், நிர்வாக ஒதுக்கீட்டுக்கான, எம்.எஸ்., படிப்பு தரவரிசை பட்டியலில், 2,689 பேர்; தனியார் பல் மருத்துவ கல்லுாரிகளின், நிர்வாக ஒதுக்கீட்டுக்கான தரவரிசை பட்டியலில், 328 பேர் இடம்பிடித்துள்ளனர். இந்நிலையில், எம்.டி.எஸ்., அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங், ஆன்லைனில் நடந்து முடிந்துள்ளது.இதில், 10 தனியார் டாக்டர்கள், ஆறு அரசு டாக்டர்கள், கல்லுாரியில் சேர்வதற்கான அனுமதி கடிதத்தை பெற்றனர்.
இதற்கிடையில், மே, 4க்குள், மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான கவுன்சிலிங்கை, ஆன்லைனில் நடத்தி முடிக்க வேண்டும் என, அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதையடுத்து, பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங்கை, இந்த வார இறுதியில் நடத்தி முடிக்க, மருத்துவ கல்வி இயக்குனரகம் முடிவு செய்து உள்ளது.
முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தகுதி பட்டியலை வெளியிடலாம் என்றும் ஆன்லைன் கவுன்சிலிங் தொடங்கலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லூரி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மூளைச்சாவு பராமரிப்பு மைய முதுநிலை நிபுணராக பணியாற்றி வரும் டாக்டர் ஜி.பி.அருள்ராஜ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் கடந்த 2009 முதல் ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றி வருகிறேன். கடந்த 2017 முதல் முதுநிலை மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றும், சலுகை மதிப்பெண் எனக்கு வழங்கப்படாததால் எனக்கு சேர்க்கை வழங்கப்படவில்லை.
இந்தாண்டு கடந்த ஜனவரியில் நடத்தப்பட்ட நீட் தேர்வில் பங்கேற்று முதுநிலை மருத்துவ சேர்க்கைக்கு தேவையான மதிப்பெண்களை கூடுதல் சதவீதத்துடன் பெற்றுள்ளேன். ஏற்கெனவே தமிழக அரசு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நீதிபதி ஏ.செல்வம் தலைமையில் கமிட்டி அமைத்து தொலைதூர, கடினமான மற்றும் ஊரக பகுதிகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு முதுநிலை மருத்துவ மேற்படிப்பில் சேர நீட் மதிப்பெண்ணுடன் சலுகை மதிப்பெண்கள் வழங்கி வருகிறது. இந்த வரிசையில் 24 மணி நேரமும் கடினமான பணியை மேற்கொள்ளும் அனைத்து மருத்துவர்களுக்கும் சலுகை மதிப்பெண் அளிக்க அந்த கமிட்டி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
அதன்படி உயிர் காக்கும் 24 மணி நேர விபத்து அவசர சிகிச்சை மற்றும் முக்கிய மருத்துவ பிரிவுகளான என்ஐசியு, சீமான்க் போன்றவற்றில் பணிபுரியும் மருத்துவர்களுக்கும் முதுநிலை படிப்பில் சேர சலுகை மதிப்பெண் வழங்கப்படுகிறது. ஆனால் 24 மணி நேரமும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் மூளைச்சாவு பராமரிப்பு போன்ற கடினமான பிரிவுகளில் பணிபுரிவோருக்கு இந்த சலுகை மதிப்பெண் வழங்கப்படுவது இல்லை. நான் கடந்த 10 ஆண்டுகளாக கடினமான சவால் மிகுந்த இப்பிரிவில் பணிபுரிந்தும் சலுகை மதிப்பெண் கிடைக்காததால் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் என்னால் மருத்துவ மேற்படிப்பில் சேர முடியாத நிலை உள்ளது. எனவே என்னை மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வுக்கு அனுமதித்து சலுகை மதிப்பெண் வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர் தகுதிப் பட்டியலை வெளியிட தடை விதித்து கடந்த 22ம் தேதி உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அரசுத் தரப்பில் முறையிடப்பட்டது. இதையடுத்து, வழக்கு நீதிபதி சுந்தர் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் இ.மனோகரன் ஆஜரானார். அப்போது, மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கே.சீனிவாசமூர்த்தி நீதிபதியிடம், தகுதிப் பட்டியலை வெளியிட்ட 8 நாட்களுக்கு பிறகுதான் ஆன்லைன் கவுன்சிலிங் நடைபெறும். ஏப்பர் 25ம் தேதி தகுதி பட்டியலை வெளியிட மாட்டோம். மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்க அவகாசம் உள்ளதால் தகுதிப் பட்டியலை நிறுத்திவைக்குமாறு உத்தரவிட்ட உத்தரவை திரும்பப்பெற வேண்டும் என்று வாதிட்டார்.
இந்த வாதத்தை பதிவு செய்த நீதிபதி, மனுதாரரின் கோரிக்கையை அரசு பரிசீலித்தால் பிரச்னை இல்ைல. அரசின் பரிசீலனை அவருக்கு எதிராக இருந்தால் அவர் சட்டபூர்வமான நிவாரணத்தை தேடிக்கொள்ளலாம். எனவே, முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தகுதிப்பட்டியலை வெளியிடலாம், ஆன்லைன் கவுன்சிலிங்கையும் தொடங்கலாம் என்று உத்தரவிடப்படுகிறது. கடந்த 22ம் தேதியிட்ட உத்தரவு திரும்பப்பெறப்படுகிறது. வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
முதுநிலை மருத்துவ படிப்பு: தரவரிசை பட்டியல் வெளியீடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.