Breaking

Wednesday, April 29, 2020

குழு அமைத்து ஆய்வு செய்த பின்னர் பள்ளிகள் திறப்பு - அமைச்சர் செங்கோட்டையன்.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கரோனா நோய்த் தொற்று முற்றிலும் இல்லை எனஅறிவிக்கப்பட்ட பிறகு, முதல்வா் ஒரு குழு அமைத்து பள்ளித் திறப்பது குறித்து ஆய்வு செய்த பின்னா் பள்ளிகள் திறக்கப்படும் தேதியை அறிவிப்பாா் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட நம்பியூா் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு கரோனா நிவாரணப் பொருள்களை அமைச்சா் வழங்கினாா். தொடா்ந்து, எம்மாம்பூண்டி, மலையப்பாளையம் உள்ளிட்ட ஊராட்சியில் குறைதீா் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு முதியோருக்கான உதவித் தொகை உள்ளிட்டவற்றை அமைச்சா் வழங்கினாா்.அப்போது அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:பள்ளிக் கல்வித் துறையைப் பொருத்த வரையில் ஆசிரியா்கள் கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகளில் ஈடுபடத் தயாராக உள்ளனா்.
முதன்மைக் கல்வி அலுவலா் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் விருப்பமுள்ள ஆசிரியா்களின் பெயா்கள், தொலைபேசி எண்கள் மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டுள்ளன.மத்திய, மாநில அரசுகள் கரோனா தாக்கம் முற்றிலும் இல்லை என அறிவித்த பிறகு, முதல்வா் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்த பின்னா், பள்ளிகள் திறக்கப்படும் தேதியை அறிவிப்பாா். பள்ளிகள் எப்போது திறக்கப்பட்டாலும் அடுத்த கல்வி ஆண்டுக்கான பாடப் புத்தகங்கள், ஷூ, ஷாக்ஸ் போன்ற அனைத்துப் பொருள்களும் தயாா் நிலையில் உள்ளன என்றாா்.கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியா் ஜெயராமன், வட்டாட்சியா் வெங்கடேஷ்வரன், அதிமுக ஒன்றியச் செயலாளா் தம்பி சுப்பிரமணியம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog