கொரோனா ஒழிப்புக்கு செயலி கண்டுபிடிக்க போட்டி - Apply Here - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 04, 2020

Comments:0

கொரோனா ஒழிப்புக்கு செயலி கண்டுபிடிக்க போட்டி - Apply Here

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனாவுக்கு எதிராக செயலி உருவாக்க அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா அழைப்பு அழைப்பு விடுத்துள்ளார். செயலி மற்றும் இணையதளங்களை உருவாக்க ஐடி தொழில்நுட்ப மாணவர்கள், அத்துறை பேராசிரியர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா அழைப்பு விடுத்துள்ளார் செயலி மற்றும் மருத்துவ உபகரணங்களை கண்டுபிடித்து, அதன் அறிக்கையை தாக்கல் செய்யலாம். மேலும் விபரங்களை, www.covid19hackathon.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், அதற்கு எதிராக போராட உதவும் அதிவிரைவு செயலி மற்றும் இணையதளங்களை உருவாக்க அண்ணா பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது."நாடு முழுவதும் கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில், அதற்கு எதிராக போராட உதவும் அதிவிரைவு செயலி மற்றும் இணையதளங்களை உருவாக்க அண்ணா பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது. அந்த வகையில், ஏப்ரல் 27 முதல் மே 6 வரை இந்த Online Hackathon நடைபெற உள்ளது. இந்தியாவில் கோவிட்-19 ஒரு பெருந்தொற்றாக உருவெடுத்த நேரத்தில், துணைவேந்தர் பேராசிரியர் எம்.கே. சூரப்பா பல்கலைக்கழக திருச்சி வளாக ஆய்வுக்குழுவினரிடம், கோவிட்-19 வைரஸ் பரவலுக்கும், பாதிப்புகளுக்கும் எதிரான தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து பெருந்தொற்று அபாயத்தைத் தடுத்து நிறுத்தும் வகையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும்படி ஆலோசனைகளை கூறி ஊக்கப்படுத்தினர்.கரோனா ஒழிப்புக்கான “ஆரோக்கிய சேது” எனும் செயலியின் பயன்பாடு இந்தப் புதிய ஹேக்கத்தான் திட்டத்திற்குத் தூண்டுகோலாக அமைந்தது. அதுபோல ஒவ்வொரு வகையான பேரிடருக்கும் தனித்தனியாகப் பல்வேறு செயலிகள் உள்ளன.இந்த நிலையிலிருந்து முன்னேறி, பலவகையான பேரிடர்களையும் கணக்கில் கொண்டு, 25 துறைகளை உள்ளடக்கி ஒரு ஒருங்கிணைந்த செயலியை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும் .
பேரிடர்க்காலங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் கண்டறிதல், அந்தத் தொழிலாளர்களுக்கான தங்குமிடங்கள், தன்னார்வலர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கான பணிகளைப் பிரித்தளித்தல், கோவிட்-19 க்கான சிகிச்சை மையங்கள், மருந்தகங்கள், முதல் நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசியப் பணியாளர்களை ஒருங்கிணைத்தல், நோயாளிகளின் சிகிச்சை மற்றும் அறிகுறிகளின் நிலை தொடர்பான தகவல்கள், மருத்துவர் நியமனம்,மருத்துவமனை அனுமதி, ஒருங்கிணைந்த டோல் ஃப்ரீ எண்கள், மக்கள் நெருக்கத்தை அறிந்து எல்லையை வரையறுத்தல்,நிவாரண நிதிகளையும், நிவாரணப் பொருட்களையும் திரட்டுதல்,கோவிட் பரிசோதனைகளை நடத்தி அதன் முடிவுகளை ஆன்லைனில் பெறுதல், வீட்டுக்கண்காணிப்பில் சிகிச்சைகளைத் தொடர்தல், நேரந்தவறாத சிகிச்சைகளுக்கான அலாரம், தனிமைப்படுத்தப்படும் நோயாளிகளுக்கு உணவளித்தல், நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மனநல ஆலோசனைகளை வழங்குதல், அரசுப் பணிகளை ஒருங்கிணைத்தல்,அத்தியாவசியப் பணிகளுக்காக பயண அனுமதிகள், தனிநபர்கள் பயண அனுமதி கோருதல், சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் விநியோகங்கள், அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு உதவுதல், ஆதரவற்றோர், திருநங்கை, திருநம்பி, மாற்றுத்திறனாளர்கள், எச்.ஐ.வி யினர், தங்கும் இடமற்றவர்கள், தனித்து வாழும் பெண்கள் ஆகிய பிரிவினருக்கு உதவுதல் என்பவை போன்ற பல்வேறு தளங்களை ஒருங்கிணைத்து, பேரிடர்க்காலத் துன்பங்களிலிருந்து மக்களைக் காக்க ஒரு அதிவிரைவுச் செயலியை உருவாக்குவதே இத்திட்டத்தின் செயல் இலக்கு.ஐ.டி தொழில்நுட்ப மாணவர்களுக்கும், அந்தத் துறை சார்ந்த பேராசிரியர்களுக்கும்இந்த ஹேக்கத்தான் தங்கள் திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்துகிறது. இந்த நிகழ்வில் இந்தியாவிலுள்ள அனைத்துத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும் பங்கேற்குமாறு ஏஐசிடிஇ அழைப்புவிடுக்கிறது.
சிறந்த செயலிகள் மற்றும் இணைதளங்களை உருவாக்குபவர்களுக்கு தேசிய அளவிலும், மாநில அளவிலும் பரிசுகள் வழங்கப்படும். அவர்களுக்கு உரிய வேலைவாய்ப்புகளுக்கும் ஒரு வாய்ப்பாக அமையும்.தேசிய அளவிலான இந்த போட்டி வரும் ஏப்ரல் 27 முதல் மே 06 வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்வுக்கு அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் எம்.கே., பதிவாளர் பேராசிரியர் எல்.கருணாமூர்த்தி ஆகியோர் தங்களது வழிகாட்டுதலையும், ஆதரவையும் வழங்குகிறார்கள். இது பற்றிய இன்னும் கூடுதல் தகவல்களை இதற்கான http://www.covid19hackathon.in/ இணைய தளத்தில் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews