Breaking

Saturday, April 11, 2020

முதல்வர்களிடம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது என்ன?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் முடக்கத்தை மத்திய அரசு கடந்த மாதம் 25ம் தேதி அமல்படுத்தியது. இது, வரும் 14ம் தேதியுடன் முடிகிறது. முடக்கத்தை அறிவித்து 16 நாட்கள் கடந்த நிலையில், கொரோனா பரவல் அதிகமாகி இருக்கிறதே தவிர, குறையவில்லை.
இதனால், மகாராஷ்டிரா உட்பட அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பான்மை மாநிலங்கள் முடக்கத்தை நீட்டிக்க மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இதனால், மகாராஷ்டிரா உட்பட அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பெரும்பான்மை மாநிலங்கள் முடக்கத்தை நீட்டிக்க மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. அதோடு, மக்களின் விருப்பத்துக்காக முடக்கத்தை தளர்த்தினால், மிகப்பெரிய உயிர்ச் சேதத்தை நாடு சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக 3 வார ஊரடங்கு செவ்வாய்க்கிழமை முடிவுள்ளது குறித்து முதல்வர்களிடமிருந்து கருத்துக்களை கேட்டார்.
மேலும், அரசியல் மாற்று கருத்துக்களை மறந்து அனைவரும் இணைந்து செயல்பட முதல்வர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். நான் வாரத்தின் 7 நாட்களும் 24 மணிநேரமும் அதாவது எந்த நேரத்திலும் பணியில் தான் இருக்கிறேன். எந்த முதல்வரும் எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொண்டு பேசலாம், கொரோனா குறித்து பரிந்துரைகளை வழங்கலாம். நாம் தோளோடு தோள் கொடுத்து ஒன்றாக நிற்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog