Breaking

Monday, March 02, 2020

கூடுதல் பேராசிரியர் நியமனம் AICTE அதிரடி உத்தரவு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இன்ஜினியரிங் கல்லுாரிகளில் திருத்தப்பட்ட ஆசிரியர், மாணவர் விகிதத்தை பின்பற்றி, புதிய பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்துள்ளது.
எதிர்ப்புநாடு: முழுவதும், அனைத்து இன்ஜினியரிங் கல்லுாரிகளிலும், சுயநிதி பல்கலைகளிலும், வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை நடத்த, ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற வேண்டும். அங்கீகாரம் வழங்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், அங்கீகாரம் பெறுவதற்கான விதிகள் அடங்கிய கையேட்டை, ஏ.ஐ.சி.டி.இ., சில வாரங்களுக்கு முன் வெளியிட்டுள்ளது. அதன்படி ஆசிரியர், மாணவர் விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஒரு பாடத்துக்கு, 20 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் என்ற விகிதம், ஏற்கனவே பின்பற்றப்பட்டது. புதிய விதிப்படி, 15 மாணவர்களுக்கு, ஒரு பேராசிரியர் பணியில் இருக்க வேண்டும் என்று, விதிகள் திருத்தப்பட்டுள்ளன.
இதன்படி, 15 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் என்ற விதியை அமல்படுத்தினால், கல்லுாரிகளுக்கு கூடுதல் செலவு ஏற்படும் என, இன்ஜினியரிங் கல்லுாரிகள் எதிர்ப்பு தெரிவித்தன.இணைப்புஇந்நிலையில், ஏ.ஐ.சி.டி.இ., தரப்பில், புதிய விதிகளுக்கான கையேட்டில், கூடுதல் இணைப்பு வெளியிடப் பட்டுள்ளது. அதில், '15 மாணவர்களுக்கு, ஒரு பேராசிரியர் என்ற விகிதத்தை, கல்லுாரிகள் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். கல்லுாரிகளும், பல்கலைகளும் இந்த விதியை பின்பற்றி, கூடுதல் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog