Search This Blog
Sunday, March 01, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மதுரை காமராஜ் பல்கலையில், முன்னாள் பெண் பதிவாளரை மிரட்டி, சர்ச்சையில் சிக்கிய, பேராசிரியர் கலைசெல்வனுக்கு, விதிமீறி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது, சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மதுரை காமராஜ் பல்கலையின் முன்னாள் பெண் பதிவாளர், அயல்மொழிகள் படிப்பிற்கான அறைகள் ஒதுக்கீடு தொடர்பாக, அத்துறையை, 2019, நவம்பர், 5ம் தேதி பார்வையிட சென்றார்.அப்போது அவரிடம், ஆங்கிலம் மற்றும் அயல் துறை பேராசிரியராக இருந்த கலைச்செல்வன், வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகாத வார்த்தைகளில் பேசி, மிரட்டல் விடுத்தார்.இதுதொடர்பான புகாரின்படி, கலைச்செல்வன் மீது, சிண்டிகேட் விசாரணை நடத்தியது.அதில், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள், உண்மை என, தெரிய வந்தது. அதுதொடர்பான அறிக்கை, துணைவேந்தர் கிருஷ்ணனிடம் அளிக்கப்பட்டது.
அந்த அறிக்கை, ஜன., 29ம் தேதி நடந்த சிண்டிகேட் கூட்டத்திலும் வைக்கப்பட்டு, அடுத்த கூட்டத்தில், கலைசெல்வனுக்கு,பதவி நீட்டிப்பு வழங்கலாமா, வேண்டாமா என, முடிவு எடுக்க தீர்மானிக்கப்பட்டது.இந்நிலையில், மறு சிண்டிகேட் கூட்டம் நடப்பதற்குள், மீண்டும் பதவி நீட்டிப்பு உத்தரவு வழங்காத நிலையில், பல்கலை சட்டத்திற்கு புறம்பாக, அவருக்கு, பிப்ரவரி சம்பளம் வழங்கப்பட்டது.இதன் மூலம், முன்னாள்துணைவேந்தர்கள் கல்யாணி, செல்லத்துரை காலங்களில் நடந்த விதிமீறல்கள் தொடர ஆரம்பித்துள்ளதோ என, கல்வியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
மதுரை காமராஜ் பல்கலையில் விதிமீறல்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.