👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மாதிரி பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. தனியார் பள்ளிகள் மட்டுமின்றி, பல அரசு பள்ளிகளும், இந்த தேர்வை நடத்துகின்றன.
தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. நடப்பாண்டில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, ஏற்கனவே பொதுத் தேர்வுகள் துவங்கி விட்டன; 10ம் வகுப்புக்கு, வரும், 27ம் தேதி துவங்க உள்ளது.இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்கும் முன், மாதிரி பொதுத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. அதேபோல், 6 முதல், 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும், சில அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில், மாதிரி பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.அதில், ஆண்டு முழுவதும் நடத்தப்பட்ட, மூன்று பருவ பாடங்களில் இருந்து, மாதிரி வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது.
மாதிரி தேர்வின் வழியாக, மாணவர்களின் தேர்ச்சியை முன்கூட்டியே அறிந்து, எந்த பாடத்தில் குறைவான மதிப்பெண் எடுத்துள்ளனரோ, அந்த பாடத்தை மீண்டும் நடத்த, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களை முழுமையாக தேர்ச்சி பெற வைக்கவும், பாடங்கள் முழுவதையும், நன்றாக புரிந்து படித்து, தேர்வு எழுத வேண்டும் என்ற நோக்கத்திலும், மாதிரி பொது தேர்வுகள் நடத்தப்படுவதாக, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.