Breaking

Thursday, March 05, 2020

கல்வியில் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு திட்டம் இல்லை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'மஹாராஷ்டிராவில் முஸ்லீம்களுக்கு கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் எங்களிடம் இல்லை' என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
மஹாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., கட்சிகளின் மகா விகாஷ் அகாடி கூட்டணி அரசு, கல்வியில் முஸ்லீம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்ததாக பிப்.,28 ல் மேல்சபையில் அமைச்சர் நவாப் மாலிக் அறிவித்தார். ஆனால் இட ஒதுக்கீடு தொடர்பான எந்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சிவசேனா அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கூறினார். ஆயினும் முஸ்லிம்களுக்கு கல்வியில் இடஒதுக்கீடு தொடர்பான சட்டம் விரைவில் நிறைவேற்றப்படுவதை மாநில அரசு உறுதி செய்யும் என அமைச்சர் நவாப் மாலிக் கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேவேந்திர பட்நாவிஸ் பேசுகையில், 'மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு செய்வது அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானது' என கூறினார். இந்நிலையில், உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியில் கூறியதாவது: கல்வியில் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பாக எந்தவித திட்டமும் அரசிடம் இல்லை. இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இடஒதுக்கீடு விவகாரத்தில் சிவசேனாவின் நிலைப்பாடு இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. இந்த கோரிக்கை வரும்போது அது தொடர்பாக விரிவான விளக்கங்களை அளிப்போம். இவ்வாறு கூறினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog