Breaking

Thursday, March 05, 2020

தமிழகத்தில் 4 இடங்களில் போட்டி தேர்வு மையம் - உயர்கல்வி துறை உத்தரவு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில், சென்னை, கோவை, மதுரை, சேலம் ஆகிய நான்கு இடங்களில், போட்டி தேர்வு மையம் அமைக்க, உயர்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' நுழைவு தேர்வு பயிற்சி, இலவசமாக வழங்கப்படுகிறது. அதேபோல், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, உயர்கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது.
இதை பின்பற்றி, உயர்கல்வி துறையும் புதிய திட்டங்களை வகுத்துள்ளது. முதற்கட்டமாக, தமிழகத்தில் நான்கு இடங்களில், பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி மையம் அமைக்க முடிவு செய்துள்ளது.சென்னை, கோவை, மதுரை, சேலம் ஆகிய நான்கு நகரங்களில், இந்த மையம் அமைய உள்ளது. ஒவ்வொரு மையத்திலும், ஒரு உதவி பேராசிரியரை பொறுப்பாளராக நியமிக்க, கல்லுாரி கல்வி இயக்குனரகத்துக்கு, உயர்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog