சாஸ்த்ரா பல்கலை.க்கு பிரிட்டனின் உயர்நிலைத் தர அங்கீகாரம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 24, 2020

Comments:0

சாஸ்த்ரா பல்கலை.க்கு பிரிட்டனின் உயர்நிலைத் தர அங்கீகாரம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பெங்களூருவில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழக முதன்மையர் (திட்டம் மற்றும் மேம்பாடு) எஸ். சுவாமிநாதனிடம் உயர்நிலை தர அங்கீகாரச் சான்றிதழை வழங்குகிறார் ஐஇடி நிறுவனத் தலைவர தஞ்சாவூ: தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்துக்கு பிரிட்டனின் ஐஇடி நிறுவனத்தின் உயர்நிலைத் தர அங்கீகாரம் வழங்கப்பட்டது. பெங்களூருவில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், இந்த அங்கீகாரச் சான்றிதழை சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக முதன்மையர் (திட்டம் மற்றும் மேம்பாடு) எஸ். சுவாமிநாதனிடம் ஐஇடி நிறுவனத் தலைவர் ரிச்சர்ட் மூர்லிங் வழங்கினார். இதுகுறித்து சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைகழகத்தின் 12 பொறியியல் பட்டப்படிப்புகளுக்கு, பிரிட்டனின் ஐஇடி எனப்படும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தினால் உயர்ந்தபட்ச அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் தனது தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் வளாகங்களுக்காக 2015-இல் ஐஇடியின் அங்கீகாரத்துக்காக விண்ணப்பித்தது. இதைத் தொடர்ந்து, சாஸ்த்ராவின் எலக்டிரிக்கல்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கம்ப்யூட்டர், மெக்கானிக்கல், கெமிக்கல் மற்றும் பயோடெக்னாலஜி ஆகிய புலங்களைச் சேர்ந்த 12 பட்டப்படிப்புகளுக்குத் தற்போது அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஒன்பது ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அங்கீகாரத்தால் 2020 முதல் 2028- ஆம் ஆண்டு வரை, பட்டப்படிப்பில் ஒவ்வொரு ஆண்டும் தேர்ச்சி பெறும் மாணவ, மாணவிகளுக்கு மிக நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த அங்கீகாரம் மாணவர்களுக்கு உலகளவில் வேலைவாய்ப்புக்கும், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களால் உயர் படிப்புக்கு எளிதில் ஏற்கப்படுவதற்கும், பல்துறை ஆய்வுகள் மேற்கொள்ளவும் மற்றும் பரிமாற்றத்துக்கும் பெரிய அளவில் பயன்படும். இந்த அங்கீகார செயல்முறையை முடித்திருப்பதன் மூலம், சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஐஇடியின் 85-க்கும் அதிகமான உலகளாவிய கல்வி நிறுவனங்களின் பட்டியலில் இடம் பிடிக்கிறது.
சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்துக்கு அங்கீகாரம் அளிப்பதற்காகப் பார்வையிட வந்த ஐஇடி குழுவின் தலைவர் ரிச்சர்ட் மூர்லிங் கூறுகையில், "சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஐஇடி தர நிர்ணயத்தை எதிர்கொள்ள மேற்கொண்ட அணுகுமுறை ஐஇடி குழுவை பெரிதும் கவர்ந்தது' என்றார். அதைத்தொடர்ந்து, ஐஇடி அங்கீகாரத்தின் சாஸ்த்ரா ஒருங்கிணைப்பாளரும், முதன்மையருமான எஸ். சுவாமிநாதன் பேசுகையில், "12 படிப்புகளுக்கு ஒன்பது ஆண்டுகள் அங்கீகாரம் என்பது சாஸ்த்ராவுக்கு கிடைத்த இரட்டிப்பு மகிழ்ச்சியாகும். சாஸ்த்ராவுக்கு கிடைத்த இந்த உலகளாவிய அங்கீகாரம், உயர்கல்விக்கு இப்பல்கலைக்கழகம் கொடுத்து வரும் முன்னோடி அணுகுமுறைக்குக் கிடைத்த பலனாகும்' என்று தெரிவித்தார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews