Breaking

Wednesday, February 12, 2020

கால்நடை மருத்துவத்துறை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிட தேர்வு: 6 தேர்வு மையங்கள் அதிரடி ரத்து

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கால்நடை மருத்துவத்துறை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கான தேர்வில் சென்னையைத் தவிர்த்து மற்ற ஆறு தேர்வு மையங்களை டிஎன்பிஎஸ்சி அதிரடியாக ரத்து செய்துள்ளது. தமிழக கால்நடை மருத்துவத்துறையில் 1,141 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கான தேர்விற்கு, அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ள இந்த தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம் மற்றும் தஞ்சை ஆகிய தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு ஹால் டிக்கெட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் தேர்வில் சென்னையைத் தவிர்த்து மற்ற ஆறு தேர்வு மையங்களை செவ்வாயன்று டிஎன்பிஎஸ்சி அதிரடியாக ரத்து செய்துள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''கால்நடை மருத்துவத்துறையில் 1,141 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கு வரும் 23 சென்னையில் மட்டும் தேர்வு நடைபெறும் என்றும், மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம், தஞ்சையில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேர்வர்களுக்கு இதுதொடர்பாக எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் அனுப்பப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் தொடர்பான தகவல்கள் இந்த முடிவிற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog