👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''மின் வாரியத்தில், ஊழியர்களை நியமனம் செய்வதற்கான தேர்வுகள், வெளிப்படையாக நடக்கின்றன,'' என, மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
தமிழக மின் வாரிய பொறியாளர் கழகத்தின் பேரவை கூட்டம், சென்னை, ஷெனாய் நகரில், நேற்று நடந்தது. அதில், மின் துறை அமைச்சர் தங்கமணி, மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பங்கேற்றனர். பின், அமைச்சர் தங்கமணி, நிருபர்களிடம் கூறியதாவது:மின் வாரியத்தில், ஊழியர்களை தேர்வு செய்வதற்காக நடத்தப்படும் தேர்வுகள், ஒளிவு மறைவின்றி, வெளிப்படையாக நடக்கின்றன; தமிழகத்தில், மின் தடை ஏற்படாது. 'கேங்மேன்' பதவிக்கான உடல் தகுதி தேர்வில், 90 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
அதில், எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை. அவை, 'வீடியோ' பதிவு செய்யப்பட்டு உள்ளன. அதை, நீதிமன்றத்தில் வழங்க தயாராக உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில், ''அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., முறைகேடு தொடர்பாக, ஸ்டாலின், தனக்கு தெரிந்த தகவல்களை, சி.பி.சி.ஐ.,டி.,யிடம் தெரிவிக்க வேண்டும். தகவல் தெரிந்தும் சொல்லாமல் இருந்தால், 'சம்மன்' அனுப்பி, உண்மை வரவழைக்கப்படும். என் மீது, பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறினால், வழக்கு தொடரப்படும்,'' என்றார்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.