👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சைதை துரைசாமியின் மனிதநேயம் ஐஏஎஸ் கல்வியகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 176 சிவில் நீதிபதி பதவிகளுக்கான முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான முதன்மை தேர்வு மார்ச் 28, 29 தேதிகளில் நடக்க உள்ளது. இதற்கான இலவச பயிற்சி வகுப்பு களை தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் மற்றும் மனிதநேய அறக்கட்டளை இணைந்து நடத்த உள்ளன. முதல்நிலை தேர்வில் வெற்றிபெற்ற அனைத்து வழக்கறிஞர்களும் பங்கேற்கலாம்.
இதில் சேர விரும்புவோர் ‘எண்:28, முதல் பிர தான சாலை, சிஐடி நகர், சென்னை-35’ என்ற முகவரியில் உள்ள மனிதநேய ஐஏஎஸ் கல்வியக அலுவலகத்தில் நேரிலோ அல்லது 044-24358373, 24330952, 8428431107 என்ற தொலை பேசி எண்கள் மூலமாகவோ பதிவு செய்ய வேண்டும். வரும் 3-ம் தேதி (நாளை) முதல் 9-ம் தேதி வரை பதிவு செய்யலாம்.
இதேபோல, தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் அலுவலகத்தில் நேரிலோ அல்லது 044-25342739 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ பதிவு செய்யலாம். சென்னை உயர் நீதிமன்ற பார் கவுன்சில் கலையரங்கத்தில் இப்பயிற்சி வகுப்பு வரும் 10-ம் தேதி தொடங்க உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.