Breaking

Saturday, February 08, 2020

தொடக்கப்பள்ளிக்கு ரூ.2 லட்சம் சீர்வரிசைகளை வழங்கிய கிராம மக்கள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பார்வதியாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கிராம மக்கள் சீர் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பள்ளிக்கல்வி குழு தலைவர் குமாரன் தலைமை தாங்கினார். இதில், சுமார் 50க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு, பள்ளிக்கு தேவையான எல்இடி டிவி, பேன், மின்விளக்குகள், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் தலைவர்களின் புகைப்படங்கள் உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை சீர் வரிசையாக ஊர்வலமாக எடுத்து வந்து வழங்கினர். சீர்வரிசை பொருட்களை பள்ளி தலைமை ஆசிரியை வசந்தகுமாரி பெற்றுக்கொண்டார். இதில், வட்டாரகல்வி அலுவலர்கள் இளவரசன், விஜயலட்சுமி மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog