ஜூன் மாதம் இடைநிலை ஆசிரியர் பணிநியமனம்? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, February 08, 2020

1 Comments

ஜூன் மாதம் இடைநிலை ஆசிரியர் பணிநியமனம்?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் அரசு ஆரம்ப பள்ளிகள் 23 , 928 , நடுநிலைப் பள்ளிகள் 7 , 260 , உயர் நிலைப் பள்ளிகள் 3 , 044 , மேல்நிலைப்பள்ளிகள் 2 , 727 ஆகியவை உள்ளன . இதில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரி யர்கள் பணியாற்றிவருகின்றனர். இவர்கள் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடம் கற்ப்பிகின்றனர் . கடந்த காலங்களில் பதிவு மூப்பு அடிப்ப டையில் பணிநியமனம் செய்து வந்தனர்.
பின்னர் ஆசிரியர் தேர்வாணையம் மூலம் தேர்வு நடத்தி ஆசிரியர்களை தேர்வு செய்து வருகின்றனர் . இந்நிலையில் ஆண்டுதோறும் இடைநிலைஆசிரியர்கள் ஓய்வு பெற்று வருகின்றனர் . மேலும் உபரி ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் மூலம் வேறு பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு வருகிறது . இதனால் இடைநிலை ஆசிரியர்களின் காலி பணியிடங்கள் அதிகரித்து வருகிறது . தற்போது மாநிலம் முழுவதும் 3 , 624 பணியி டங்கள் காலியாக உள்ளது .
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகா ரிகள் கூறியதாவது : மாநிலம் முழுவதும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மொத்தம் 3 , 624 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலி யாக உள்ளன . அதாவது , அரியலூர் மாவட் டத்தில் - 47 , கோவை - 56 , கடலூர் - 102 , தருமபுரி - 355 , ஈரோடு - 108 , காஞ்சிபுரம் - 123 , கரூர் - 1 , கிருஷ்ண கிரி - 830 , நாகப்பட்டி னம் - 06 , நாமக்கல் - 49 , புதுக்கோட்டை - 75 , சேலம் - 138 , தஞ்சாவூர் - 44 , நீலகிரி - 25 , திருப்பூர் - 168 , திருவள்ளூர் - 82 , திருவண் ணாமலை - 578 , திருவாரூர் - 28 , வேலூர் 393 , விழுப்புரம் - 416 ஆகிய மாவட்டங்களில் காலிப்பணியிடங்கள் உள்ளன . இந்த பணியிடங்களுக்கு வரும் ஜூன் மாதத்திற்குள் தேர்வு நடத்தி இடைநிலை ஆசியர்களை நியமனம் செய்யப்பட உள்ள னர் . அதற்காக தான் மாவட்ட வாரியாக காலி பணியிட பட்டியல் வெளியிடப்பட்டுள் ளது . இவ்வாறு அவர்கள் கூறினர் .
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

1 comment:

  1. இடைநிலை ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வு 2013,2017 தேர்ச்சி பெற்றும் பணி கிடைக்கவில்லை..கிராமபுற பகுதி மக்களுக்கு பொருளாதர சூழ்நிலை இல்லாத பொழுதும் படித்து தேர்ச்சி பெற்றிருக்கிறோம்..தயவு செய்து பணி நியமனம் வழங்குங்கள் அல்லது இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தை இழுத்து மூடுங்கள்..கல்வியை வியாபாரம் ஆக்காதீர்கள்

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews