Breaking

Sunday, February 09, 2020

பசுமையை மீட்டெடுக்க மாணவியர் 1.50 லட்சம் விதைப்பந்துகள் தயாரிப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கஜா' புயலால் மரங்களை இழந்த, டெல்டா மாவட்டங்களில், மீண்டும் பசுமையை மீட்டெடுக்க, 3,000 மாணவியர் இணைந்து, 1.50 லட்சம் விதைப்பந்துகளை உருவாக்கி, சாலையோரம் மற்றும் கடலோர காட்டுப்பகுதிகளில் துாவும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த, 2018, நவ.,16ம் தேதி வீசிய, 'கஜா' புயல், கடலோர மாவட்டங்களான நாகை, திருவாரூர்,தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களை, கபளீகரம் செய்தது. லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்தன. இப்பகுதிகளில், பசுமையை மீண்டும் உருவாக்க, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் நாகை, தனியார் கல்லுாரி நிர்வாகம் மற்றும் திருவாரூரைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில், 3,000 மாணவியரை ஒருங்கிணைத்து, 1.50 லட்சம் விதைப்பந்துகள் தயாரிக்கும் நிகழ்வு, இரு தினங்களுக்கு முன் நடைபெற்றது. கல்லுாரி நிர்வாகிகள் கூறியதாவது:'கஜா' புயலுக்கு பின், டெல்டா மாவட்டங்களில் புவி வெப்பம்அதிகரித்துள்ளது.
வெப்பத்தை தடுப்பதற்கும், வரும் தலைமுறைக்கு இயற்கையான காற்றுத் தேவைக்கும் விதைப்பந்து தயாரிக்கப்படுகிறது.இதற்காக, கோயம்புத்துார் வனப்பகுதிகளில் இருந்து புங்கன், பூவரசு,மயில்கொன்றை, வாகை, வேம்பு, கருவாகை, கொய்யா, புளி, வில்வம் போன்றவற்றின், 1.50 லட்சம் விதைகள் சேகரிக்கப்பட்டன.அவற்றை செம்மண், களி மண், மாட்டு எருவையில் உருண்டைகளாக மாற்றி, விதைபந்துகள் தயாரிக்கப்படுகிறது. மரக்கன்றுகள் பராமரிக்க முடியாத இடங்களில், விதைப்பந்துகள் வீசப்படும். கோடைக்காலத்தில் விதைப்பந்துகள் துாவப்பட்டாலும், லேசான ஈரம் கிடைத்தாலே, அவை முளைத்துவிடும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog