தொழிலாளர்கள் நலவாரிய தேர்வுகள் திடீர் ரத்து! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 30, 2020

Comments:0

தொழிலாளர்கள் நலவாரிய தேர்வுகள் திடீர் ரத்து!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கணினி இயக்குபவர், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 2019 நவ. 17, 30, டிச.1-ல் நடைபெற உள்ள தேர்வுகள் ரத்து செய்து கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் அறிவித்துள்ளது. தொழிலாளர்கள் நல வாரியத்தில் காலியாக உள்ள கணினி இயக்குபவர் மற்றும் இளநிலை உதவியாளர் பதவிகளுக்கான தேர்வுகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் காலியாக உள்ள கணினி இயக்குபவர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக, 17.10.2018 அன்று இணையதளம் மற்றும் நாளிதழ்களில் அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு 17.11.2019, 30.11.2019 மற்றும் 1.12.2019 அன்று தேர்வுகள் தமிழகம் முழுவதும் நடந்தன. இதை தொடர்ந்து 18.1.2020 மற்றும் 20.1.2020 அன்று நேர்முகத் தேர்வு சென்னையில் நடந்தது. தற்போது, மேற்காணும் எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்படுகிறது. தேர்வு நடத்தும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews