👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''தமிழ்நாடு திறந்த நிலை பல்கலையின் நிர்வாக நடைமுறைகள், இனி தமிழிலேயே நடக்கும்,'' என, பல்கலை துணைவேந்தர் பார்த்தசாரதி கூறினார்.
தமிழ்நாடு பல்கலையின் தமிழியல், பண்பாட்டு துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை சார்பில், தமிழ் ஆட்சிமொழி திட்ட செயலாக்கம் குறித்து, இரண்டு நாள் பயிற்சி, நேற்று துவங்கியது.
பயிற்சியை துவக்கி, தமிழ்நாடு பல்கலையின் துணைவேந்தர் பார்த்தசாரதி பேசியதாவது: தமிழக அரசு துறைகளிலும், பல்கலைகளிலும், தமிழில் தான் அலுவலக நடைமுறைகள் நடக்க வேண்டும். இதற்கு முன்னோடியாக, தமிழக, திறந்தநிலை பல்கலையின் அலுவலக நடைமுறைகள் அனைத்தும், தமிழிலேயே இருக்கும்.
தமிழ் ஆட்சி மொழி திட்ட செயலாக்கம் தொடர்பாக, வரும் கல்வி ஆண்டு முதல், சான்றிதழ் படிப்பு நடத்தப்படும். தமிழ் மென்பொருளை பயன்படுத்தி, நிர்வாக நடைமுறைகளை எளிதில் மேற்கொள்ளலாம். இவ்வாறு, அவர் பேசினார்.நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் விஜயராகவன், பேராசிரியர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.