Breaking

Tuesday, January 21, 2020

Breaking News: நீட் பயிற்சி வகுப்புகள் நிறுத்தம்!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடுவதில் சிக்கல் நீடிப்பதால் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்குவது நிறுத்தப்படுகிறது என்றும், மார்ச் மாதம் கடைசியில் பயிற்சி துவங்கும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு. மதுரையில் மாணவர்கள் வருகை குறைவாக உள்ள 'நீட்' தேர்வு பயிற்சி மையங்களை நகர்ப்புற மையங்களுடன் ஒன்றிணைக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இம்மாவட்டத்தில் 15 'நீட்' தேர்வு பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. இந்தாண்டு 980 பேர் பங்கேற்க விருப்பம் தெரிவித்தனர். அவர்கள் இருப்பிடத்திற்கு உட்பட்ட ஒன்றியங்களில் மையங்கள் ஒதுக்கி சனி, ஞாயிறு பயிற்சி அளிக்கப்படுகின்றன. இதற்காக ஒன்றியம் தோறும் பாட வாரியாக ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கப்படுகிறது. நகர்ப்புறம் சார்ந்த மையங்களில் மாணவர் வருகை ஓரளவு இருப்பினும் கிராம மையங்களில் சில மாணவர் மட்டுமே வருகின்றனர். பல மையங்கள் காத்தாடுகின்றன. பயிற்சியின் நோக்கமே சிதைந்து விடுவதாக ஆசிரியர் ஆதங்கப்படுகின்றனர்.
அவர்கள் கூறியதாவது: மாணவர்கள் நலன் கருதி எந்த நேரத்திலும் பயிற்சி அளிக்க தயாராக உள்ளோம். ஆனால் ஆர்வத்துடன் பதிவு செய்தாலும் பயிற்சிக்கு வரும் மாணவர்கள் மிக குறைவு. கொட்டாம்பட்டி ஒன்றிய மையத்தில் ஒரு மாணவர் தான் வருகிறார். அவருக்கும் பாடங்கள் வாரியாக ஆசிரியர் ஒதுக்கப்படுகின்றனர். 'அரசியல் பிரமுகர்கள் தங்கள் பலத்தை காட்ட அவரவர் ஒன்றியங்களில் மையம் இருக்க வேண்டும்' என்ற பிடிவாதத்தால் மாணவர்கள் குறைவான மையங்களை இணைப்பது குறித்து அதிகாரிகள் முடிவு எடுக்க முடியவில்லை. இணைத்தால் கூடுதல் கவனம் செலுத்தி ஆசிரியர் கற்பிக்க முடியும். மதுரை ஆய்வின் போது கல்வி கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யனிடம் இதுகுறித்து வலியுறுத்தப்பட்டது. விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog