Search This Blog
Tuesday, January 21, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
1985ம் ஆண்டு தொடங்கப்பட்டது ஹிந்துஸ்தான் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கல்வி நிறுவனம், இந்தக்காலத் தலைமுறைக்கு ஏற்றாற்போல் பல்வேறு தொழில் பிரிவுகளில் மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில் பாடத்திட்டங்களை ஏற்படுத்தியுள்ளோம்
'தம்பி என்னப்பா படிக்கப் போற?' - 'இன்ஜி'... எனச் சொல்லி முடிப்பதற்குள் 'அது படிச்சா வேலை கிடைக்காதாம்ல' என்று யாராச்சும் சொன்னால், தயவு செய்து அதை நம்பாதீர்கள், எல்லாம் கட்டுக்கதை! எந்தவொரு விஷயத்தைச் செய்தாலும் பிளான் பண்ணிப் பண்ணணும் - காமெடி வசனமாக இருந்தாலும், அந்த ஒரு பிளான்தான் நம் வாழ்க்கையின் அஸ்திவாரம். அவ்வாறுதான் இனிஜினியரிங் படிப்புக்கான பிளானும் மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க உதவுகிறது
இன்ஜினியரிங் படித்து முடித்ததும், நல்ல வேலை, கைநிறைய சம்பளம், இதுவே பலரின் எதிர்பார்ப்பாகும். இன்ஜினியரிங் பாடத்திட்டத்தில் வழங்கப்படும் இளநிலை பட்டமான B.E பாடங்களையே மாணவர்கள் அதிகம் தேர்ந்தெடுப்பர். அதைவிட தொழில்நுட்ப செயல்முறைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பி.டெக் பாடங்களை எடுத்துப் படிப்பவர்களுக்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன! செயல்முறை பொறியியல் படிப்பான B.Tech மற்றும் கட்டமைப்புகளை வடிவமைக்கும் பாடமான B.Arch போன்ற பாடங்களைத் தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் குறைவாகவேயுள்ளனர். இளைஞர்கள் அதிகமாக உள்ள இந்தியாவில், பிரகாசமான வாய்ப்புகள் நிறைந்த ஃபேஷன் துறையில் கால்பதிக்க உதவுகிறது B.Des. முன்பு இருந்ததைவிட B.Tech, B.Arch மற்றும் B.Des பட்டதாரிகளுக்கான தேவை எதிர்காலத்தில் அதிகமாக இருக்கப்போகிறது. ஒவ்வோர் ஆண்டும் இப்பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புகளும் உயர்ந்துகொண்டே வருவதால் இன்ஜினியரிங் எடுத்துப் படிப்பதில் எந்தவிதச் சிக்கலும் இல்லை!
எங்கு படிக்கலாம்...?
"1985ம் ஆண்டு தொடங்கப்பட்டது ஹிந்துஸ்தான் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் கல்வி நிறுவனம், இந்தக்காலத் தலைமுறைக்கு ஏற்றாற்போல் பல்வேறு தொழில் பிரிவுகளில் மாணவர்களைத் தயார்படுத்தும் வகையில் பாடத்திட்டங்களை ஏற்படுத்தியுள்ளோம். அனுபவமிக்க ஆசிரியர்களையும், மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டுத் திறமைக்கு உறுதுணை செய்யும் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளையும் கொண்டுள்ளோம். B.Tech, B.Arch, B.Des படிப்புகளை செயல்முறை ரீதியாக கற்றுக்கொடுக்கும் அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். கடந்த 3 ஆண்டுகளில் ஹிந்துஸ்தானில் பயின்ற மாணவர்களில் 950-க்கும் மேற்பட்டோர், இந்தியா மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர். இதனால் மாணவர்கள், இன்ஜினியரிங் படிப்பில் தங்களின் வளர்ச்சிக்கானப் பாதையில் முன்னோக்கி செல்ல எந்தத் தடையும் இருக்காது!" என்கிறது ஹிந்துஸ்தான் நிகர்நிலைப் பல்கலைக்கழகம்.
ஹிந்துஸ்தான் நுழைவுத் தேர்வு - தவறவிடாதீர்கள்!
வருகிற கல்வியாண்டில் மூன்று பாடப் பிரிவுகளுக்கான ஆன்லைன் நுழைவுத் தேர்வின் (HITSEEE) தேதிகளை அறிவித்துள்ளது ஹிந்துஸ்தான் நிகர்நிலைப் பல்கலைக்கழகம். பி.டெக். (B.Tech), பி.ஆர்க்.(B.Arch), பி.டெஸ்.(B.Des), ஆகிய படிப்புகளுக்கான இத்தேர்வு, 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் 25 முதல் 30 வரை, நாடு முழுவதும் உள்ள 50 மையங்களில் நடைபெறும். நுழைவுத் தேர்வு விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 15, 2020. HITSEEE நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இப்போதே முந்திடுங்கள்!
முக்கிய குறிப்பு :
HITSEEE நுழைவுத் தேர்வில் முதல் 25 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு 100% கல்விக் கட்டணம் (Tuition Fee) இலவசம், அடுத்து 25 முதல் 50 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு 75% கல்விக் கட்டணமும், 50 முதல் 100 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களுக்கு 50% கல்விக் கட்டணமும் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
'இன்ஜினியரிங் படித்தால் வேலை கிடைக்காது' எனும் பொய்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.