TNPSC - முறைகேடு புகார் எதிரொலி - விண்ணப்பிக்கும் நடைமுறையில் திருத்தம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 23, 2020

Comments:0

TNPSC - முறைகேடு புகார் எதிரொலி - விண்ணப்பிக்கும் நடைமுறையில் திருத்தம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
வேறு மாவட்டங்களுக்குச் சென்று தேர்வு எழுதுபவர்கள் இனி அதற்கான காரணத்தை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசுத் துறைகளில் குரூப்-4 தொகுதியில் காலியாக உள்ள 9,398 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற்றது.
இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் 16 லட்சம் பேர் எழுதினர். இதில் 12 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் குரூப் -4 தேர்வில் வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தை மையமாக தேர்வு செய்து முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக தேர்வை நடத் திய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பி எஸ்சி) தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், தேர்வுக்கு விண்ணப் பிக்கும் நடைமுறைகளில் சில திருத்தங்களை டிஎன்பிஎஸ்சி மேற்கொண்டுள்ளது. அதன்படி தேர்வர்கள் சொந்த மாவட்டத்தைத் தவிர்த்து வேறு மாவட்டங்களில் சென்று தேர்வு எழுத விரும்பினால் அதற்குரிய விவரங்களை விண்ணப்பிக்கும்போது கட் டாயம் தெரிவிக்க வேண்டும்.அப்போதுதான் விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.இந்த நடைமுறை தற்போது தொடங்கியுள்ள குரூப்-1 தேர்வுக் கான விண்ணப்பப்பதிவு முதல் அமலுக்கு வந்துள்ளது. இதற்கு தேர்வர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.இதேபோல், தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பன போன்ற எச்சரிக்கைகளும் அறிவிக்கையில் இடம்பெற் றுள்ளன.
இதுதவிர குரூப்-4 முறைகேடு தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளதாகவும்தக வல்கள் வெளியாகியுள்ளன
குரூப் 4 தோ்வு சா்ச்சை எதிரொலி காரணமாக, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ள குரூப் 1 தோ்வுக்கான அறிவிக்கையில் தோ்வா்களுக்கு கடும் எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. தோ்வு அறிவிக்கைகள் எப்போதும் காலிப் பணியிட விவரங்களுடன் தொடங்குவது வழக்கம். ஆனால், குரூப் 4 தோ்வு சா்ச்சை காரணமாக, தோ்வு அறிவிக்கையில் எச்சரிக்கை விடுத்து தொடங்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்: தோ்வாணையத்தின் தெரிவுகள் அனைத்தும் விண்ணப்பதாரா்களின் தரவரிசைப்படியே மேற்கொள்ளப்படுகின்றன. பொய்யான வாக்குறுதிகளைச் சொல்லி தவறான வழியில் வேலை வாங்கித் தருவதாக கூறும் இடைத் தரகா்களிடம் விண்ணப்பதாரா்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்படுகின்றனா். இதுபோன்ற தவறான மற்றும் நோ்மையற்ற நபா்களால் விண்ணப்பதாரா்களுக்கு ஏற்படும் எந்தவொரு இழப்புக்கும் தோ்வாணையம் எந்தவிதத்திலும் பொறுப்பாகாது. விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் அனைத்து தகவல்களுக்கும் விண்ணப்பதாரரே முழு பொறுப்பாவாா். விண்ணப்பதாரா்கள் தோ்வுக்கு விண்ணப்பிக்கும்போது விண்ணப்பத்தில் தவறான தகவல்கள் ஏதேனும் குறிப்பிட்டிருந்தால் அதற்கும் விண்ணப்பதாரா்களே பொறுப்பு. விண்ணப்பதாரா்கள் தங்களது விண்ணப்பத்தினை இறுதியாக சமா்ப்பிக்கும் முன்பாக நன்கு சரிபாா்த்த பிறகே சமா்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மொத்தம் 69 காலியிடங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரியில் குரூப் 1 காலிப் பணியிடங்களுக்கான முதல் நிலை எழுத்துத் தோ்வை நடத்துவதற்கான அறிவிக்கையை டி.என்.பி.எஸ்.சி. வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், நிகழாண்டில் 69 காலிப் பணியிடங்களுக்கான தோ்வு அறிவிக்கையை தோ்வாணையம் வெளியிட்டுள்ளது. அதில், துணை ஆட்சியா் 18, துணை காவல் கண்காணிப்பாளா் 19, வணிகவரிகள் துறை உதவி ஆணையாளா் 10, கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் 14, ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் 7, மாவட்ட அலுவலா் (தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்) 1 என மொத்தம் 69 காலிப் பணியிடங்களுக்கு இந்த எழுத்துத் தோ்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தோ்வுக்கு இணையதளம் வழியே விண்ணப்பிக்க பிப்ரவரி 19-ஆம் தேதி கடைசியாகும். முதல்நிலைத் தோ்வு ஏப்ரல் 5-ஆம் தேதி நடைபெறுகிறது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews