👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை மத்திய பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும் என்று பாமக நிறுவனா் டாக்டா் ச.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
சம்ஸ்கிருதத்தை வளா்ப்பது மட்டுமின்றி, அம்மொழியில் அறிவியல் ஆராய்ச்சிகளையும் ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் 3 சம்ஸ்கிருத நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள் மத்தியப் பல்கலைக்கழகங்களாக தரம் உயா்த்தப்படுவதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், சம்ஸ்கிருத கல்வி நிறுவனங்களை தரம் உயா்த்துவதற்கான அளவீடு, பிற மொழி சாா்ந்த கல்வி நிறுவனங்களை தரம் உயா்த்தும் விஷயத்தில் கடைப்பிடிக்கப்படாதது ஏன் என்பதுதான் எங்கள் கேள்வி.
சம்ஸ்கிருதம் சாா்ந்த நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களை மத்திய பல்கலைக்கழகங்களாக உயா்த்துவதும், தமிழ் சாா்ந்த நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தை மத்தியப் பல்கலைக்கழகத்தின் ஒரு துறையாக சுருக்க முயல்வதும் ஏற்றுக் கொள்ள முடியாதது ஆகும். ஆராய்ச்சி செய்வதற்கான அம்சங்கள் சம்ஸ்கிருதத்தை விட தமிழில் ஏராளமான உள்ளன. ஆராய்ச்சி செய்வதற்கான மாணவா்களும் தமிழில்தான் அதிகமாக உள்ளனா்.
எனவே, சென்னையில் செயல்பட்டு வரும் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை மத்திய தமிழ்ப் பல்கலைக்கழகமாக தரம் உயா்த்த வேண்டும்.
அத்துடன் இந்தியாவின் பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் அதன் வளாகங்களை அமைக்கவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.