👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தாய் செல்போனில் பேசியபடி உணவு கொடுத்தபோது 2வது மாடியில் இருந்து தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டை நாராயணப்பதோட்டம், 7வது தெருவை சேர்ந்தவர் சையத் அபுதாகீர் (34). அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி மும்தாஜ் (30). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகன் இர்பான் (ஒன்றரை வயது). இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் வீட்டின் 2வது மாடியில் நின்றுகொண்டு மும்தாஜ் ெசல்போன் பேசியபடி குழந்தை இர்பானுக்கு சாப்பாடு ஊட்டியுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக குழந்தை தவறி மாடியில் இருந்து கீழே விழுந்தது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மும்தாஜ், படுகாயமடைந்த குழந்தையை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு, சிகிச்சை பலனின்றி நள்ளிரவு குழந்தை இர்பான் பரிதாபமாக உயிரிழந்தான். இதனை கண்டு பெற்றோர்கள் கதறி அழுதனர். இதுகுறித்து, வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை மாடியில் இருந்து விழுந்து இறந்த சம்பவம் வண்ணாரப்பேட்டை பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், கடந்தாண்டு கொடுங்கையூரில் மாடியில் நின்றுகொண்டு குழந்தைக்கு தாய் சாப்பாடு கொடுத்தபோது, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து இறந்தது. கடந்த 4 மாதங்களுக்கு முன், சவுகார்பேட்டையில் 3வது மாடியில் நின்றுகொண்டு செல்போனில் பேசியபடி குழந்தைக்கு தாய் சாப்பாடு ஊட்டும்போது குழந்தை தவறி விழுந்து இறந்தது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.