👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் இன்ஜினியர் முரளி. இவரது மனைவி லலிதாபிரியா. இவர்களது மகள் மைதிலி(19). இவர், திருவாரூர் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக விடுதியில் தங்கி பிஎஸ்சி, பிஎட் 2ம் ஆண்டு படித்து வந்தார்இவருடன் விடுதி அறையில் தங்கிய 2 மாணவிகள் ஊருக்கு சென்று விட்டனர். ராஜ என்ற மாணவி மட்டும் தங்கியிருந்தார். நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் சாப்பிட கேன்டீனுக்கு ராஜ அழைத்துள்ளார். நீ முதலில் செல், சிறிது நேரத்தில் வருகிறேன் என்று கூறியுள்ளார். சாப்பிட்டுவிட்டு 9.30 மணியளவில் ராஜ திரும்பியபோது கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. தட்டியும் திறக்காததால் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து பணியாளர்கள் கதவை உடைத்து பார்த்தபோது மின் விசிறியில், சுடிதார் துப்பட்டாவால் தூக்குப் போட்டு தொங்கியபடி மைதிலி இறந்துகிடந்தார்.
இதுகுறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். போலீசார் கூறுகையில், அவர் கடந்த சில நாட்களாக யாரிடமும் சரியாக பேசாமல் அமைதியாக இருந்துள்ளார். எனவே அவர், மன உளைச்சலில் இருந்திருக்க வேண்டும். பெற்றோர் கொடுக்கும் தகவலின்பேரில் விசாரணை நடத்தினால்தான் காரணம் தெரியவரும் என்றனர்.தமிழர்கள் குறைவு: திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் 1,750 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இதில் 250 பேர் மட்டுமே தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் வெளி மாநிலத்தவர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.