Breaking

Tuesday, December 24, 2019

அரசுப் பள்ளி மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்கு சன் டி.வி. 1.82 கோடி நிதி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் கல்வித் திறன் மேம்பாட்டுக்காக சன் டி.வி. ரூ.1.82 கோடி நிதி உதவி அளித்துள்ளது. கல்வி நிலையங்களில் அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்குதல், மாணவர்களுக்கான கற்றல் சூழலை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சமூக மேம்பாட்டுப் பணிகளுக்காக சன் டி.வி. தொடர்ந்து நிதி உதவி அளித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 50 அரசுப் பள்ளிகளில் 350 ஸ்மார்ட் வகுப்பறைகள் கட்ட சன் டி.வி. ஒரு கோடியே 82 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது.
இதற்கான காசோலையை, சேவ் தி சில்ட்ரன் தொண்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விஷால் சாவ்லா, நிர்வாகி திவ்யா பட் ஆகியோரிடம் சன் டி.வி. சார்பில் காவேரி கலாநிதி மாறன் வழங்கினார். சமூக மேம்பாட்டுப் பணிகளுக்காக சன் டி.வி. கடந்த 5 மாதங்களில் மட்டும் ரூ.25 கோடிக்கும் அதிகமாக நிதி உதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog