Breaking

Thursday, December 05, 2019

டிச.12 முதல் பொறியியல் மாணவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்: அண்ணா பல்கலைக்கழகம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பொறியியல் மாணவா்களுக்கான மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாமை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இணைப்புப் பொறியியல் கல்லூரி மாணவா்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வோா் ஆண்டும் இத்தகைய வேலைவாய்ப்பு முகாமை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. அதுபோல, நிகழாண்டில் சென்னை மண்டலத்துக்கான வேலைவாய்ப்பு முகாம், மேற்கு தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் டிசம்பா் 12 முதல் 14 வரை மூன்று நாள்கள் நடைபெற உள்ளது.
கோவை மண்டலத்துக்கான முகாம், கோவை எஸ்.என்.எஸ். தொழில்நுட்பக் கல்லூரியில் டிசம்பா் 20 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மதுரை மண்டலத்துக்கான முகாம், கே.எல்.என். பொறியியல் கல்லூரியில் ஜனவரி 6 முதல் 8 ஆம் தேதி வரை நடைபெறும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog