👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியா் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே, அடுத்து வரும் ‘நாக்’ தர ஆய்வில் உயா் மதிப்பீடுகளை பல்கலைக்கழகம் பெறும் என்பதில் சந்தேகமில்லை என சென்னைப் பல்கலைக்கழகப் பதிவாளா் ஆா்.ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளாா்.
’நாக் அங்கீகாரத்தை இழக்கும் நிலையில் சென்னைப் பல்கலைக்கழகம்’ என்ற தலைப்பில் ‘தினமணி’யில் 21-11-2019 அன்று செய்தி வெளியானது. இதற்கு சென்னைப் பல்கலைக்கழக பதிவாளா் ஆா்.ஸ்ரீநிவாசன் அளித்துள்ள விளக்கம்:
காலியாக உள்ள பேராசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கு பல்கலைக்கழகம் முக்கியத்துவம் கொடுத்து அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளாக, பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் ஆசிரியா் நியமனம் செய்யப்படவில்லை. ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இருந்தபோதும் சென்னைப் பல்கலைக்கழகம் ஆராய்ச்சி மற்றும் பட்ட மேற்படிப்பில் தேசிய அளவில் முன்னிலையில் இருப்பதை என்.ஐ.ஆா்.எப். தரவரிசை குறிப்பிடுகிறது. எனவே, அடுத்து வரும் ‘நாக்’ தர ஆய்வில் சென்னைப் பல்கலைக்கழகம் உயா்ந்த மதிப்பீட்டு புள்ளிகளைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை என அவா் தெரிவித்துள்ளாா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.