இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பிரதீப்யாதவ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது (பழைய பணியிடம் அடைப்புக் குறிக்குள்):
1. ஆா்.முருகன்- முதன்மைக் கல்வி அலுவலா், கிருஷ்ணகிரி (முதன்மைக் கல்வி அலுவலா், கோயம்புத்தூா்)
2. கே.பி.மகேஸ்வரி- முதன்மைக் கல்வி அலுவலா், கரூா் (முதன்மைக் கல்வி அலுவலா், கிருஷ்ணகிரி)
3. சி.முத்துகிருஷ்ணன்- முதன்மைக் கல்வி அலுவலா், அரியலூா் (முதன்மைக் கல்வி அலுவலா் கரூா்)
4. பெ.அய்யண்ணன்- முதன்மைக் கல்வி அலுவலா், கோயம்புத்தூா் (முதன்மைக் கல்வி அலுவலா், அரியலூா்)
இதைத் தொடா்ந்து தஞ்சாவூா் மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மைய நிா்வாக அலுவலா் பணியிடத்தை நிா்வகிக்கும் பொறுப்பு நிா்வாக நலன் கருதி தஞ்சாவூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எம்.இராமகிருஷ்ணனிடம் முழு கூடுதல் பொறுப்பாக வழங்கி அரசு ஆணையிட்டுள்ளது. அதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூா் மாவட்டக் கல்வி அலுவலா் கே.மதிவாணனுக்கு, பெரம்பலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக தற்காலிக பதவி உயா்வு அளிக்க ஆணையிடுவதாக அதில் கூறியுள்ளாா்.

