ஆசிரியர்கள், கல்வி அலுவலர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 27, 2019

Comments:0

ஆசிரியர்கள், கல்வி அலுவலர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
இன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் கலந்து கொண்டு பேசினார்.
அவரது அறிவிப்பு!!
ஆசிரியர்கள் ஒழுக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும். கலந்தாய்வில் தரையில் படுத்து உருண்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
முதன்மைக்கல்வி அலுவலர்கள் ஒழுங்காக நடந்து கொண்டாலே தமிழகம் கல்வியில் முன்னிலை பெற்றுவிடும்.
₹26.40 கோடி செலவில் மாணவர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்த நடவடிக்கை.
இசை,ஓவியம்,நடன பயிற்சிகளும் மாணவர்களுக்கு வழங்கப்படும்.
5 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை தத்தெடுத்து மேம்படுத்த நடவடிக்கை.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்த முதன்மை கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். பின்னர் பேசிய அவர்; பள்ளி தொடங்கிய 15 நாட்களுக்குள் மாணவர்களுக்கான அனைத்து பொருட்களும் விநியோகம் செய்யப்படும் என கூறினார். 5-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகள் விவரத்தை தெரிவிக்க வேண்டும்; அப்பள்ளிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் செலவாகிறது. விஜயதசமியின் போது அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் பள்ளியில் சேரலாம்.
பெற்றோரோ மாணவர்களோ எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. டிசம்பர் மாதத்தில் கூட மாணவர்களைப் பள்ளியில் சேர்த்துக்கொள்ள அரசு தயாராகவே உள்ளது. மாணவர்களுக்கு சிரமம் இருக்கும் வகையில் தேர்வு இருக்காது. மாணவர்களின் தரத்தை மேம்படுத்தவே 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. பள்ளி மைதானத்தை முறையாக பயன்படுத்தி மாணவர்களுக்கு உரிய பயிற்சிகளை வழங்க வேண்டும். அரசு சார்பில் வழங்கப்படும் புத்தகங்கள், சீருடைகள் சரியான முறையில் விநியோகிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews