👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
உயர் கல்வி ஒரு பெருமை; அது எல்லோருக்கும் கிடைப்பதில்லை என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
ஷில்லாங்கில், நார்த் ஈஸ்டர்ன் ஹில் பல்கலைக்கழகம் உள்ளது. இதன் 26-வது ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், ''பல்கலைக்கழக மாணவர்கள் கிராமப்புற மக்களுக்காக உதவ வேண்டும். பட்டம் பெற்ற பட்டதாரிகள் மூலம் குழந்தைகளுக்கான தூய்மை, கல்வி அறிவு, சுகாதாரம், ஊட்டச்சத்து ஆகியவற்றை கிராம மக்கள் கற்றுக்கொள்வர். இது கிராமத்தினருக்கு மட்டும் பயன்படாது. கள நிலவரம் என்ன என்பதை பட்டதாரி இளைஞர்கள் அறிந்து கொள்வதன் மூலம் அதிக விழிப்புணர்வுடனும் பொறுப்புடனும் அவர்கள் செயலாற்ற முடியும்.
மேகாலயாவை வளர்ச்சிப் பாதைக்கு எடுத்துச் செல்வதில் பட்டதாரிகளின் பங்கு மிகப்பெரியது. உயர் கல்வி ஒரு பெருமை; அது எல்லோருக்கும் கிடைப்பதில்லை. நலிந்த குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பட்டதாரிகள் உதவ வேண்டும். பதக்கம் பெற்ற மாணவர்களில், 76% பேர் மாணவிகளே. இது சமூகத்தின் வளர்ச்சியையும் பிரகாசமான எதிர்காலத்தையும் சுட்டிக் காட்டுகிறது'' என்றார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
இந்த விழாவில் மேகாலயா ஆளுநர், முதல்வர், கல்வித் துறை அமைச்சர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 14,502 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.