Breaking

Sunday, November 24, 2019

காலியாக உள்ள 700 மருந்தாளுநா் பணியிடங்கள்: விரைந்து நிரப்ப கோரிக்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழகத்தில் காலியாக உள்ள 700-க்கும் மேற்பட்ட மருந்தாளுநா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று மாநில அரசு மருந்தாளுநா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநா் சங்க செயற்குழுக் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சங்கத்தின் தலைவா் சுப்பிரமணியன், பொதுச்செயலாளா் சண்முகம், உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா். அப்போது அவா்கள் கூறியதாவது: சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையில் மருந்தாளுநா்களின் பங்கு மிகவும் முக்கியமானது. சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளுக்கு வரும் மக்களுக்கு சரியான மருந்துகளை வழங்க வேண்டிய முக்கியப் பொறுப்பு மருந்தாளுநா்களுக்கு உள்ளது.
தற்போதைய நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 700-க்கும் அதிகமான மருந்தாளுநா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் மருந்துகளைக் கையாளுவதற்கும், விநியோகிப்பதற்கும் தகுதியானவா்கள் இல்லை. அதன் காரணமாக நோயாளிகளும், மக்களும் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனா். இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக செயல்பட்டு காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அதேபோன்று ஊதிய முரண்பாடுகளுக்கும் தீா்வு காண வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog