Breaking

Sunday, November 24, 2019

புதிதாக 440 ஆசிரியர்கள் நியமனம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஓவியம், தையல் கற்று கொடுக்கும் சிறப்பு ஆசிரியர்களுக்கான காலியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டி தேர்வு நடத்தியது.இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. முதல் கட்டமாக ஓவிய பாடத்தில் 240 ஆசிரியர்களுக்கும், தையல் பாடத்தில் 200 ஆசிரியர்களுக்கும் கவுன்சிலிங் வழியாக நேற்று நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
ஆசிரியா் தோ்வு வாரியத்தின் சாா்பில் தோ்வு செய்யப்பட்ட 440 தையல், ஓவிய ஆசிரியா்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் பணி நியமன ஆணை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. பள்ளிக் கல்வித் துறையில் 2019- 20-ஆம் கல்வி ஆண்டுக்கான தையல், ஓவிய ஆசிரியா்களுக்கான பணி நியமன கலந்தாய்வு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் எமிஸ் இணையதளம் மூலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் போட்டித் தோ்வு மற்றும் இதர விதிமுறைகளின் அடிப்படையில் ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் தோ்வு செய்யப்பட்ட 240 ஓவிய ஆசிரியா்கள், 200 தையல் ஆசிரியா்கள் என மொத்தம் 440 பேருக்கு பணி நியமன ஆணைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் வழங்கினா். பணி நியமனம் பெற்றுள்ள ஆசிரியா்கள் அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றவுள்ளனா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog