👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தனியார் துறையில் வேலை வாய்ப்பு முகாம், வருகிற 29ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதுகுறித்து தமிழக அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் (பொறுப்பு) விஷ்ணு வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வேலை வாய்ப்பு வெள்ளியாக அனுசரிக்கப்பட்டு, வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் வாரம்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களும் இணைந்து, வருகிற 29ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன.
இந்த முகாம், ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகம், ஆலந்தூர் சாலை, கிண்டி, சென்னை-32 என்ற முகவரியில், காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. முகாமில் 35 வயதிற்கு உட்பட்ட 8ம் வகுப்பு, 10 மற்றும் பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதி உடைய அனைவரும் (மாற்றுத் திறனாளிகள் உட்பட) கலந்துகொள்ளலாம். முகாமில் 15க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு 1000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இச்சேவைக்கு கட்டணம் ஏதுமில்லை. வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், தனியார் துறை நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.