Search This Blog
Tuesday, November 26, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மன்னார்குடியில் நடைபெற்ற விதைப்பந்து திருவிழாவில் ஒரு லட்சம் விதைப் பந்துகளை தயாரித்து மாணவர்கள் சாதனை படைத்தனர். விதைப்பந்துகள் என்பது சாண எரு, செம்மண் அல்லது களிமண் மற்றும் விதைகள் ஆகியவற்றைக் கொண்டு உருவாக்கப் படுவதாகும். விதைப் பந்துகள் வீசுதல் என்பது வனப்பகுதிகளில் மரங்களின் எண்ணிக்கையை அதிகப் படுத்தும் முறையாகும்.
இது செம்மண் அல்லது களிமண் 60 சதவீதம் மற்றும் மக்கிய சாணஎரு சதவீதம் இரண்டையும் கலந்து அதன் நடுவே விதைகளை வைத்து ஒரு பெரிய நெல்லிக்காய் அளவில் உருட்டி முதலில் நிழலில் உலர்த்தி பின்பு வெய்யிலில் காய வைத்து எடுக்க வேண்டும். இவற்றை மழைக்காலங் களுக்கு முன்பாக எங்கெல்லாம் நீர் ஊற்றி பராமரிக்க முடியாதோ அங்கெல்லாம் விதைக்கலாம்.எல்லா மரங்களும் வளர்வதற்கு என்னவெல்லாம் காரணிகள் தேவையோ அவையெல்லாம் இதற்கும் தேவை. விதைத்தேர்வு, செய்யும் முறை, விதைக்கும் இடங்கள் மற்றும் பாதுகாப்பு ஆகியவை விதைப்பந்துகளின் வெற்றியை தீர்மானிக்கும்.கொடுக்காபுளி, வில்வம், விலா, புங்கன், வேம்பு ஆகியவை இதற்கு உகந்த விதைகளாகும்.இந்நிலையில் மன்னார்குடி அறம் நண்பர்கள் குழு, தேசிய மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் தான்தோன்றி குழு ஆகிய அமைப்புகள் இணைந்து மேற்கொண்ட ஒரு லட்சம் விதைப்பந்துகள் தயாரிக்கும் விதைப் பந்துகள் விழா பள்ளி வளாகத்தில் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் ராமநாதன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன், மாவட்ட நாட்டுநலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விதைப்பந்துகள் தயாரிக்கும் நிகழ்வினை சுற்றுச்சுழல் ஆர்வலர் டாக்டர் பாரதிசெல்வன் தொடங்கி வைத்து பேசுகையில், கடந்த ஆண்டு கஜா புயலால் ஏராளமான மரங்கள் அழிந்து போயின. இது போன்ற இயற்கை பேரிடர் மட்டுமின்றி காடுகள் அழிப்பு சாலை விரிவாக்கம் காரணமாக மரங்கள் அழிக்கப்படுதல் நகர மயமாக்கல் காரணமாக மரங்கள் வெட்டப்படுதல் போன்ற பல்வேறு காரணங்களாலும் பாலைவனமாக மாறிவிடும் சூழ்நிலை உள்ளது. இதனால் புவி வெப்பமடைதல் ஏற்படுகிறது. இதன் விளைவாக சுற்றுப்புறசூழல் பாதிப்பு, பருவம் தவறி மழைபெய்தல் அல்லது ஒரே நாளில் மிக அதிக கனமழை. அல்லது வறட்சி ஆகிய மோசமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. இவற்றை தவிர்க்க மரங்கள் நிறைய வளர்த்து பராமரிக்க வேண்டும். இதன் மற்றொரு வடிவம் தான் விதைப்பந்துகள் தயாரித்தல் ஆகும்.
இது போன்ற செயல்கள் மூலம் தான் நாம் வாழும் பூமியை காப்பாற்ற முடியும் அதற்கு இளம் தலைமுறையினரான மாணவர்களிடம் இத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மேற்கொண்டிருக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நாட்டு நலப்பணித்திட்டம் போன்ற பள்ளி சார்ந்த அமைப்புகள் பணி பாராட்டத்தக்கது. இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து 2நாட்கள் நடைபெற்ற விதைப்பந்து விழாவில் பள்ளி மாணவர்கள் சுமார் ஒரு லட்சம் விதைப்பந்துகளை தயாரித்து சாதனை படைத்தனர். முன்னதாக அறம் நண்பர்கள் குழு நிர்வாகி பாலாஜி வரவேற்றார். முடிவில் தான்தோன்றி குழு கார்த்திக் நன்றி கூறினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
1 லட்சம் விதைப்பந்துகள் தயாரித்து மாணவர்கள் சாதனை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.