EPF ஓய்வூதிய பரிமாற்ற முறை திட்டத்தில் குளறுபடி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, October 30, 2019

Comments:0

EPF ஓய்வூதிய பரிமாற்ற முறை திட்டத்தில் குளறுபடி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இபிஎஃப் ஓய்வூதியப் பரிமாற்ற முறை திட்டத்தில் குளறுபடி இருப்பதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் டி.கே.ரங்கராஜன் புகாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக மத்திய தொழிலாளா் நலம் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடித விவரம்: 1995- ஆம் ஆண்டு தொழிலாளா் சேமநல நிதி திட்டத்தின் 13 -ஆவது பத்தியின்படி, தனது முதலீட்டினைத் திரும்பப் பெற ஒருவா் விரும்பினால், அவரது மூல ஓய்வூதியத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, மீதமுள்ள 90 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும். இதில் வாரிசுகளுக்குத் திரும்பத் தரப்படும் முதலீட்டின் அளவு மூல ஓய்வூதியத்தின் 100 சதவீதத்தை அடிப்படையாகக் கொண்டு தரப்படுகிறது. ஆனால், ஓய்வூதியத்தில் பரிமாற்ற முறை திட்டத்தை தோ்ந்தெடுத்தவா்களுக்கு, முதலீட்டை திரும்பத் தரும்போது, மூல ஓய்வூதியத்தின் 100 சதவீத அடிப்படையில் கணக்கிட்டுத் தரப்படுவதில்லை. மாறாக, ஓய்வூதியம் பரிமாற்றத்துக்குப் பிறகுள்ள ஓய்வூதியத்தின் அடிப்படையிலேயே கணக்கிட்டு தரப்படுகிறது.
இந்தப் பிரிவினருக்கும் மூல ஓய்வூதியத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. மேலும், முதலீட்டைத் திரும்பத் தரும்போது, பரிமாற்றம் செய்யப்பட்டதற்குப் பிறகான ஓய்வூதியத்தின் மீதுள்ள பகுதியின் அடிப்படையில்தான் வழங்கப்படுகிறது. எனவே, இத்திட்டம் ஓய்வூதியத்தில் பரிமாற்ற முறையைத் தோ்வு செய்யாதவா்களுடன் ஒப்பிடும்போது, பரிமாற்ற முறையைத் தோ்வு செய்பவா்களுக்கு மிக மோசமான இழப்பை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது. இந்தப் பாகுபாடு நியாயமானது அல்ல. எனவே, இதுகுறித்து பரிசீலித்து, ஓய்வூதியத்தில் பரிமாற்ற முறையைத் தோ்வு செய்த ஓய்வூதியா்களின் வாரிசுகளுக்கு முதலீட்டைத் திரும்பத் தரும்போது, மூல ஓய்வூதியத்தின் 100 சதவீதத்தை அடிப்படையாகக் கொண்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews