👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சத்யபாமா பல்கலைக்கழகத்தின் பார்ட் டைம் (பகுதி நேர) எம்.இ, எம்.டெக் படிப்புகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் வேலையிழந்த முன்னாள் மாணவர்கள் மாநில தகவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் ஜவகர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகம் சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் பார்ட் டைம் எம்.இ, எம்.டெக் படித்த மாணவர்களின் பட்டங்கள் செல்லாது என்று அறிவித்து அவர்களுக்கு சம்பளம் வழங்க மறுத்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட 4 பேர் தமிழக மாநில தகவல் ஆணையர் அலுவலகத்தில் இதுதொடர்பாக முறையிட்டுள்ளனர். சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 2002ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை பார்ட் டைம் எம்.இ, எம்.டெக் படித்தவர்கள் ஆந்திராவின் ஜவகர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம், ஆந்திர அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஜவகர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் சத்யபாமா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களுக்கு 2019 ஜனவரி முதல் சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான முன்னாள் மாணவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாநில தகவல் ஆணையர் முத்துராஜ், குறிப்பிட்ட எம்.இ, எம்.டெக் பட்டங்கள் செல்லும் என்பதற்கான ஆவணங்களை ஆந்திர அரசு, ஜவகர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு அனுப்புமாறு உத்தரவிட்டார். மாணவர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், தகவல் கேட்டும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக பல்கலைக்கழகங்கள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திடம் மனு அளித்தும் உரிய பதிலளிக்கவில்லை.இந்நிலையில், பார்ட் டைம் எம்.இ, எம்.டெக் படிப்புகளை நடத்த அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலிடம்(ஏஐசிடிஇ) முன் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என சத்யபாமா பல்கலைக்கழக நிர்வாகம் மாநில தகவல் ஆணையத்தில் பதிலளித்துள்ளது. இந்நிலையில் பார்ட் டைம் எம்.இ, எம்.டெக் படிப்புகள் செல்லும் என்பதற்கான ஆவணங்களை ஆந்திர அரசு, ஜவகர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு அனுப்புவதோடு, 2 மாதங்களுக்குள் இந்த விவகாரத்தில் மாணவர்களுக்கு உரிய விளக்கமளித்து சுமூக சூழலை உருவாக்க வேண்டும் என்று மாநில தகவல் ஆணையர் முத்துராஜ், சத்யபாமா பல்கலைக்கழக பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை சத்தியபாமா பல்கலைக்கழத்தின் எம்.டெக் பகுதி நேர படிப்பு சான்றிதழ் செல்லாது என ஆந்திராவில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் திடீரென அறிவித்துள்ளது. சென்னை செம்மஞசேரியில் சத்யபாமா இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் & டெக்னாலஜி எனப்படும் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியானது அன்னை சத்தியபாமா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்டதாகும். இந்த நிறுவனத்தில் கற்பிக்கப்படும் எம்.இ மற்றும் எம்.டெக் படிப்புகளில் வெளி மாநிலத்தவர் உள்பட ஏராளமானோர் பகுதி நேரமாக படித்து வருகின்றனர். அவர்களுக்கு படிப்பை முடித்ததற்கான உரிய சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் அதனடிப்படையில் பணியில் சேருகின்றனர்.
அந்த வகையில், சத்தியபாமா பல்கலையில் எம்.டெக் படிப்பை முடித்த ஆந்திராவைச் சேர்ந்த சிலர், அம்மாநிலத்தின் அனந்தப்பூரில் உள்ள ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலையில் பணியில் சேர்ந்துள்ளனர். இந்நிலையில், சத்யபாமா பல்கலைக்கழகத்தில் பெறப்பட்ட எம்.டெக். பகுதி நேர படிப்புக்கான சான்றிதழ் செல்லாது என்று அப்பல்கலைக்கழகம் திடீரென அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாது, இத்தகையை சான்றிதழுடன் பணியில் சேர்ந்த அனைவரையும் பணிநீக்கம் செய்து ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பதிவாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் சென்னை சத்தியபாமா பல்கலைக்கழக நிறுவனத்தை தொடர்புகொண்டு, எதன் அடிப்படையில் எம்.டெக் பகுதி நேர படிப்பிற்கான பாடங்களை நடத்துகுறீர்கள்.
அதற்கான அனுமதி பெற்றிருந்தால் உரிய ஆவணங்களை தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை அடுத்து, சென்னையில் உள்ள தகவல் ஆணையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டுள்ளனர். குறிப்பாக உமா மகேஸ்வரி, லட்சுமி நாராயணா, ரவிக்கிரன், நரசிம்ம ராவ் ஆகியோர் இதுதொடர்பான மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களை விசாரித்த மாநில தகவல் ஆணையர் முத்துராஜ், பாதிக்கப்பட்டவர்கள் கேட்கும் தகவல்களை அளிக்க சத்தியபாமா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டுள்ளார். அதோடு மட்டுமல்லாமல், இந்த ஆவணங்களை ஆந்திர மாநில அரசு மற்றும் ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திலும் தாக்கல் செய்ய சத்தியபாமா பல்கலைக்கழகத்திற்கு மாநில தகவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U