👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நாளுக்கு நாள் போலிச் செய்திகள் பரவுவது அதிகரித்துக்கொண்டே உள்ளது. இந்தப் போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்த அனைத்து சமூக வலைத்தளங்களும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருன்கின்றன. இருப்பினும் போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்துவது அவர்களுக்கு மிகப் பெரியச் சவாலாகவுள்ளது.
தேர்தலின்போது வதந்திகள் பரவாமல் இருக்க வாட்ஸ் அப்பில் ஒரு நேரத்தில் 5 குறுஞ்செய்திகளை மட்டுமே ஃபார்வர்ட் செய்யும்படி கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் வாட்ஸ்அப் போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் மோசமாக செயல்பட்டுள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிரேசிலைச் சேர்ந்த ஃபெடரல் மினாஸ் பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் எம்.ஐ.டி.ஐச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தேர்தல் சமயத்தில் வாட்ஸ்அப் போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்துவதில் எப்படி செயல்பட்டுள்ளது என்பது தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர். இவர்கள் பிரேசில், இந்தோனேசியா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளைத் தேர்தெடுத்துள்ளனர். இதில் தேர்தலுக்கு முந்தைய 60 நாட்களும், தேர்தலுக்குப் பின் 15 நாட்களும் குரூப்களில் பரப்பப்பட்ட ஃபார்வர்ட் மெசஜ்களை ஆராய்ந்துள்ளனர்.
வாட்ஸ் அப்பில் 5 தகவல்களை மட்டுமே ஒரு நேரத்தில் பகிரமுடியும் எனக் கொண்டுவந்தபின்பு செய்திகள் பரவுவது கொஞ்சம் குறைந்துள்ளது. இருப்பினும் இதன் மூலம் போலிச் செய்திகளை வாட்ஸ் அப்பால் கட்டுப்படுத்த முடியவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
வாட்ஸ் அப்பில் இரண்டுவிதமான குரூப்கள் செயல்படுகின்றன. ஒன்று பொது குரூப், இதில் யார் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம். மற்றொன்று தனிப்பட்ட குரூப். இதில் அட்மின் என ஒருவர் இருப்பார். குரூப்பின் மொத்தக் கட்டுப்பாடும் அந்த நபரிடம் இருக்கும். இதில் தனிப்பட்ட குரூப்களில் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளைக் இவர்களால் கணிக்க முடியவில்லை.
இந்த ஆராய்ச்சியாளர்கள் பொதுவான குரூப்களில் சேர்ந்துக்கொண்டு அதில் பகிரப்படும் தகவல்களைக் கண்காணித்துள்ளனர். பொதுவாக பகிரப்படும் போட்டோக்கள் இரண்டு நாட்களுக்கு மேல் இருக்காது. அதாவது 80 சதவீத போட்டோக்கள் வாட்ஸ் அப்பில் அதிகபட்சமாக 2 நாட்களுக்கு பகிரப்படுகிறது. இந்த கால அளவுக்குள் பாதிப் பயனர்களை இந்தப் போட்டோ சென்றடைந்துவிடுகிறது. ஆனால், பிரேசில் மற்றும் இந்தியாவில் சில படங்கள் 2 மாதங்களுக்கும் மேல் பகிரப்பட்டுள்ளன.
பெரும்பாலும் பொதுக் குரூப்களில் அதிக வதந்திகள் பரப்பப்படுவதாக இவர்கள் தெரிவித்துள்ளனர். போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்த வாட்ஸ்அப் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றது. இது தொடர்பாக மக்களிடம் போதிய அறிவுரைகளையும் வழங்கியுள்ளது. இருப்பினும் வாட்ஸ் அப்பால் போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என இந்த ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளனர்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.