👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இளநிலை உதவியாளர் பதவிக்கு தேர்வானவர்கள் மீது உள்ள, வழக்கு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைவிபரங்களை வழங்குமாறு, மாவட்ட மேலாளர்களுக்கு, 'டாஸ்மாக்' நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழக அரசின், டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக, மது விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.இந்நிறுவனம், மது கடைகளில், தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஊழியர்களில், பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு, சிறப்பு தேர்வு நடத்தி, 500 பேருக்கு, அலுவலகங்களில், இளநிலை உதவி யாளர் வேலை வழங்க உள்ளது. இதற்காக, ஆகஸ்ட், 18ல் நடத்தப்பட்ட எழுத்து தேர்வை, 8,401 பேர் எழுதினர். எந்த அரசு நிறுவனமும் செய்யாத வகையில், டாஸ்மாக், மிக விரைவாக, இம்மாதம், 3ம் தேதி, தேர்வு முடிவுகளை வெளியிட்டது.எந்த புகாரும் இன்றி, நேர்மையாக தேர்வு நடத்தியதற்காக, ஊழியர் சங்கங்களும், டாஸ்மாக் நிர்வாகத்தை பாராட்டின.
தேர்வானவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்ட பின், பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. இது குறித்து, டாஸ்மாக் மேலாளர் ஒருவர் கூறியதாவது:அரசு துறையில் வேலைக்கு தேர்வானவர்கள் மீதான, குற்ற வழக்குகளை ஆய்வு செய்த பின் தான், பணி ஆணை வழங்கப்படும்.மது கடைகளில், அதிக விலைக்கு மது விற்பது, பணம் கையாடல் போன்ற குற்றங்களை, ஊழியர்கள் செய்துள்ளனர். இதற்காக, அவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
எனவே, தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின் குற்ற வழக்குகள், ஒழுங்கு நடவடிக்கை விபரங்களை, வரும், 9ம் தேதிக்குள் அனுப்புமாறு, மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. வழக்கு நிலுவைஉள்ளவர்களுக்கு, வேலை வழங்கலாமா என, சட்ட நிபுணர்களிடம் ஆலோசித்த பின், பணியாணை வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U