குரூப் - 4 தேர்வு முடிவுகள், டிசம்பரில் வெளியிடப்படும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 07, 2019

குரூப் - 4 தேர்வு முடிவுகள், டிசம்பரில் வெளியிடப்படும்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'குரூப் - 4 தேர்வு முடிவுகள், டிசம்பரில் வெளியிடப்படும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, கிராம நிர்வாக அலுவலரான, வி.ஏ.ஓ., டைப்பிஸ்ட், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட எட்டு பதவிகளுக்கு, குரூப் - 4 தேர்வு, கடந்த, 1ம் தேதி நடந்தது. இதில், 14 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வுக்கான உத்தேச விடை குறிப்பு, ஒரு சில தினங்களில் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற பட்டியலை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. அதில், குரூப் - 4 தேர்வுக்கான முடிவு, இந்தாண்டு டிசம்பரில் வெளியாகும்; இன்ஜினியரிங் பணிகளுக்கான தேர்வு மற்றும் 'குரூப் - 1' முதன்மை தேர்வின் முடிவுகள், அக்டோபரில் வெளியாகும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பட்டியலில், 19 தேர்வுகளின் முடிவுகள், வெளியாகும் தேதிகள் இடம் பெற்றுள்ளன டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கான உத்தேச விடைத்தாள் ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்பட 6 ஆயிரத்துக்கும் அதிகமான பணியிடங்களுக்கு கடந்த 1-ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வினை 13.50 லட்சம் பேர் எழுதினர். ஒவ்வொரு போட்டித் தேர்வின் போதும் தேர்வில் கேட்கப்பட்ட வினாத்தாளுக்கான உத்தேச விடைகள் அடங்கிய பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், அண்மையில் நடந்த குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைத்தாள்கள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் ஓரிரு நாள்களில் பதிவேற்றம் செய்யப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உத்தேச விடைகளில் ஏதேனும் தவறுகளோ அல்லது திருத்தங்களோ இருந்தால் அதுகுறித்த உரிய ஆதாரங்களுடன் தேர்வாணையத்துக்குத் தெரிவிக்கலாம். தேர்வர்கள் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்த முடியும். தேர்வர்கள் அனுப்பிய ஆட்சேபத்தை டி.என்.பி.எஸ்.சி. சார்பில் அமைக்கப்படும் நிபுணர் குழுவானது ஆய்வு செய்து, சரியாக இருக்கும் பட்சத்தில் திருத்தப்பட்ட விடைகளுடன் இறுதி விடைப் பட்டியலை வெளியிடும். ஓரிரு மாதங்களில் தேர்வு முடிவுகளை வெளியிடவும் தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews