👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மதுரை: வெளி மாநிலங்களில் நிரந்தரமாக குறியேறியவர்களுக்கு எதன் அடிப்படையில் தமிழகத்தில் இருப்பிடச் சான்று வழங்கப்பட்டது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
எம்பிபிஎஸ் கலந்தாய்வில் வெளி மாநிலத்தவர்கள் கலந்து கொண்டது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, வெளி மாநிலங்களில் நிரந்தரமாக குறியேறியவர்களுக்கு எதன் அடிப்படையில் தமிழகத்தில் இருப்பிடச் சான்று வழங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பிய உயர் நீதின்ற மதுரைக் கிளை, இது குறித்து தமிழக அரசும், கலந்தாய்வில் பங்கேற்ற 126 மாணவர்களும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், கலந்தாய்வில் பங்கேற்ற 126 பேரும் தமிழர்களாக இருந்தாலும், வெளி மாநிலத்தில் நிரந்தரமாகக் குடியேறியவர்களாக இருக்கிறார்கள் என்று நீதிபதிகள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
இது குறித்து மதுரையைச் சேர்ந்த சோம்நாத், நேயா, ஸ்ரீலயா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில், 85 சதவீதம் இடங்கள், மாநில மாணவர்களுக்கும், 15 சதவீத இடங்கள் பிற மாநில மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஜூலை 6ஆம் தேதி தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. ஜூலை 8 ஆம் தேதி இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியது. ஜூலை 15 ஆம் தேதி தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது.
தனியார் மருத்துவ சுய நிதி கல்லூரிகளின், நிர்வாக ஒதுக்கீடு இடங்களை தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற வரைமுறை இல்லை. இதனால் நிர்வாக ஒதுக்கீட்டில் வெளி மாநிலத்திவர்கள் அதிக அளவில் சேருகின்றனர். இவர்கள், தமிழகத்தில் மருத்துவம் படித்துவிட்டு, வெளி மாநிலங்களுக்கு சென்றுவிடுவர். இதனால் தமிழகத்திற்கு எந்த பலனும் இல்லை.
எனவே, தமிழக மருத்துவக் கல்வி இயக்குநகரத்தின் செயலர் 2019- 20-ஆம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைகான கலந்தாய்வை ரத்து செய்ய வேண்டும். மேலும், இளங்கலை மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு பட்டியலில் வெளிமாநில மாணவர்களை நீக்க வேண்டும். புதிய கலந்தாய்வு பட்டியலை வெளியிட்டு அதன் அடிப்படையில் மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
எம்.பி.பி.எஸ். கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட வெளிமாநில மாணவர்களுக்கு ஏதன் அடிப்படையில் தமிழக இருப்பிட சான்று வழங்கப்பட்டுள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்கேற்ற 126 வெளிமாநில மாணவர்கள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மனுவை விசாரித்த நீதிபதிகள் 2 வாரங்களுக்குள் அரசுத்தரப்பும் 126 மாணவர்களும் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U