👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
DSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி - தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி 2019-20ம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி காலியாக உள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை - பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் 5 மாதங்களுக்கு ரூ.10000/மாதம் - தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள அனுமதி அளித்தல்-சார்பு
பள்ளிக்கல்வி - தமிழ்நாடு மேல்நிலைக்கல்விப்பணி - 2019 - 20ம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி காலியாக உள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை அனுமதி.
இவ்வாறு தற்காலிகமாக பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலமாக ஏற்பாடு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.1000/- வீதம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.
PG Consolidated Pay Order - Click here
அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக்கொள்ள பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. அரசு மேல்நிலைபள்ளிகளில் காலியாக உள்ள 2,449 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், தற்காலிக ஆசிரியர்களை நியமித்துக்கொள்வது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறையின் அரசாரணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழகம் முழுவதுமுள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் சுமார் 2,449 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
PG Consolidated Pay Order - Click here
விரைவில் 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில், அம்மாணவர்களின் கல்வி பாதிப்படைய கூடாது என்ற காரணத்தால் இந்த காலிப்பணியிடங்களில் உடனடியாக தகுதியான ஆசிரியர்களை, தற்காலிக ஆசிரியர்கள் என்ற அடிப்படையில் நியமனம் செய்துகொள்ளலாம். தமிழ், இயற்பியல், ஆங்கிலம், கணிதம், உயிரியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், பொருளியல், வணிகவியல் போன்ற முக்கிய பாடங்களில், தங்களுடைய பள்ளிகளில் ஏதேனும் காலிப் பணியிடங்கள் இருந்தால், இதன் காரணமாக மாணவர்கள் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல் அவதியுறும் சூழ்நிலை இருந்தால் உடனடியாக பள்ளிக்கு அருகாமையில் உள்ள தகுதிவாய்ந்த ஆசிரியர்களை கொண்டு அந்த இடங்களை நிரப்ப வேண்டும்.
ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை 5 மாதங்களுக்கு மட்டும் 2,449 தற்காலிக முதுகலைப் பட்டதாரி ஆரிசியர்களை பள்ளிகளே நேரடியாக நியமித்துக்கொள்ளலாம். மாதம் ரூ.10,000 என தொகுப்பூதியத்தின் அடிப்படையிலே தற்காலிக ஆசியர்களை அந்தந்த பள்ளிகள் பணியமர்த்திக் கொள்ளலாம். இந்த நியமனத்தை இந்த மாதம் முதலே பள்ளிகள் செய்துகொள்ளலாம். ஆசிரியர்களின் ஊதியத்திற்காக ரூ.12.24 கோடி நிதி ஒதுக்கி அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் நலன் கருதி பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம், ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
PG Consolidated Pay Order - Click here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U