அரசு பள்ளிகளில் கட்டுமானங்களில் விதிமீறல்; பொ.ப.துறைக்கு, நபார்டு எச்சரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 23, 2019

அரசு பள்ளிகளில் கட்டுமானங்களில் விதிமீறல்; பொ.ப.துறைக்கு, நபார்டு எச்சரிக்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
ஒப்பந்த விதியை மீறி, அரசு பள்ளிகளில் கட்டுமான பணிகள் நடப்பதாக, பொதுப்பணி துறையை, &'நபார்டு&' வங்கி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, நபார்டு வங்கி கடனுதவி வழங்கி வருகிறது. இந்த நிதியில், பொதுப்பணி துறையினர் கட்டுமான பணிகளை மேற்கொள்கின்றனர். ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக, இப்பணிகள் நடக்கின்றன. அரசு பள்ளிகளில், இந்த பணிகளை மேற்கொள்வதற்கு, 2018ல், 1,269 கோடி ரூபாயை, நபார்டு வங்கி வழங்கியது. இதில், 1,291 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.தற்போது, 204 பள்ளிகளில், 366 கோடி ரூபாய் மதிப்பீட்டில், கூடுதல் வகுப்பறைகள், ஆய்வுக்கூடம், குடிநீர் வசதி, கழிப்பறை, சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.விதியை மீறி, இப்பணிகளை மேற்கொண்டு வருவதாக, நபார்டு வங்கி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதேநிலை தொடர்ந்தால், நிதி வழங்குவது நிறுத்தப்படும் என்றும், அவர்கள் எச்சரித்து உள்ளனர்.இது குறித்து, பொதுப்பணி துறை பொறியாளர் ஒருவர் கூறியதாவது: நபார்டு வங்கி வாயிலாக, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை, வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களில், அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு மேம்படுத்தும் பணிகள் நடக்கின்றன. வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பறைகள் ஆகியவற்றை, தனித்தனியாக கட்ட வேண்டும் என்பது விதி. ஆனால், இடம் நெருக்கடி என்று பொய்யை கூறி, ஒரே கட்டடத்தில், கழிப்பறைகள், ஆய்வகங்கள் கட்டப்படுகின்றன.ஆய்வகங்கள், கழிப்பறைகளுக்கு சேர்த்து, ஒரே கட்டடம் அமைப்பதால், பல லட்சம் ரூபாய் மிச்சப்படுத்தி, முறைகேடு செய்யப்படுகிறது. பொதுப்பணி துறையில் முன்பிருந்த அதிகாரிகளும், தற்போது உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகளும், இதற்கு உடந்தையாக இருப்பது, வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நபார்டு வங்கி எச்சரிக்கைக்கு பின், முதல்வர், இ.பி.எஸ்., முறையாக விசாரித்தால், பல்வேறு தகவல்கள் வெளிச்சத்திற்கு வரும். இவ்வாறு, அவர் கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews